சென்னை: பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக தலைவராக நீதியரசர் அப்துல் வஹாப் தேர்வு செய்யப்பட்டார்.
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நீதியரசர் அப்துல் வஹாப் அவர்களுக்கு பொதுச்செயலாளர் சேமுமு முஹம்மதலி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
பொருளாளர் ஏ.வி.எம். ஜாபர்தீன், சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் முனைவர் ஹ.மு.நத்தர்ஷா, ஆலிமான் ஜியாவுத்தின் மற்றும் கழகத்தினரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.