திங்கள், 26 ஜனவரி, 2009

தமுமுக தலைமையகத்தில் குடியரசு தினவிழா


சென்னை, மண்ணடி, வட மரைக்காயர் தெருவிலுள்ள தமிழ்நாடு முஸ்­ம் முன்னேற்றக் கழக தலைமையகத்தில் நமது நாட்டின் 59வது குடியரசு தின விழா நடைபெற்றது. தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கொடியேற்றியேற்றினார். கொடியேற்றிய பின்னர் உரையாற்றிய தமுமுமு தலைவர் ''நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் தமிழ்நாடு முஸ்­ம் முன்னேற்றக் கழகம் மகிழ்ச்சி அடைகின்றது.


250 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நிலவிய வெள்ளை ஏகாதிபத்திய ஆதிக்கத்தை இந்துக்கள் முஸ்­ம்கள் கிறிஸ்த்தவர்கள் சீக்கியர் என நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் தோளோடு தோள் நின்று அளப்பரிய தியாகம் செய்ததினால் முறியடித்து 1947ல் விடுதலைப் பெற்றோம். அத்தகைய ஒற்றுமை உணர்வும், நல்­ணக்கப் பண்பாடும் இந்தக் காலக்கட்டத்திற்கு மிகவும் அவசியமாகும்.


குடியரசு தினம் நாம் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்பதை மீண்டும் பிரகடனம் செய்யும் தினமாகும். இத்தினத்தில் நாட்டின் இறையாண்மையை காக்கவும், நாட்டில் தீவிரவாத சிந்தனை வேரறுக்கப்படவும், அனைத்து சமூகங்களிடையே நல்­ணக்கம் மேலோங்கவும் அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட உறுதி எடுத்துக் கொள்வோமாக'' என்று அவர் கூறினார்.


இந்நிகழ்ச்சியின் போது தமுமுக துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர்கள் எம். தமிமுன் அன்சாரி, அப்துஸ் சமது, மாநில உலமா அணிச் செயலாளர் எஸ்.பி. யூசுப், மாநில தொண்டரணிச் செயலாளர் முகம்மது ரஃபி தலைமைக் கழக பேச்சாளர் கோவை செய்யது மற்றும் வட சென்னை மற்றும் தென் சென்னை தமுமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் உரிமை குடும்பகத்தினர்களும் முன்னிலை வகித்தனர்.

கருத்துகள் இல்லை: