மதரஸாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதரஸாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 ஆகஸ்ட், 2010

கல்வி உரிமைச் சட்டம் மதரஸாக்களை பாதிக்காதவாறு உறுதி செய்யப்படும்: கபில் சிபல்

புதுடெல்லி,ஆக6:கல்வி உரிமைச்சட்டம் (Right of Education Act) மதரஸாக்களை பாதிக்காதவாறு மத்திய அரசின் சிறப்பு வழிகாட்டுதல் வெளியிடப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

கல்வி உரிமைச்சட்டம் மதரஸாக்களுக்கு பாதகமாக மாறாது என்றும், இதனை தெளிவுப்படுத்தும் வழிகாட்டுதல் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கல்வி உரிமைச்சட்டம் தொடர்பாக இந்தியா இண்டர்நேசனல் செண்டரில் வைத்து நடந்த மாநாட்டில் உரை நிகழ்த்தினார் அவர். கல்வி உரிமைச்சட்டம் மதரஸாக்களை பாதிக்குமென்ற சந்தேகங்களை அகற்ற நடவடிக்கையை மேற்கொள்ள சில முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

"சட்டத்திருத்தம் கொண்டுவர காலதாமதம் ஏற்படும். ஆனால் வழிகாட்டுதல் வெளியிட உடனடியாக இயலும்" என அமைச்சர் தெரிவித்தார்.

மதரஸாக்களை பாதுகாப்பதற்காக ஒரு வழக்கறிஞர் என்ற நிலையில் வேண்டுமென்றால் அதற்காக வாதாடவும் தான் தயார் என அவர் தெரிவித்தார். மதரஸாவின் செயல்பாடுகளில் அரசு தலையிடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார். கல்வி உரிமைச்சட்டம் புரட்சிகரமானதும், முஸ்லிம்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கதாக இருந்தாலும், மதரஸாக்கள் விஷயத்தில் ஆதரவானதல்ல என்பது மாநாட்டின் பொதுக்கருத்தாக இருந்தது.

ஆனால் இதுக்குறித்து கவலைப்படத் தேவையில்லை என கபில் சிபல் தெரிவித்தார். மதக்கல்வி நிறுவனங்களுக்காக சிறப்பு போர்டு உருவாக்கவேண்டுமென்ற மாநாட்டு தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவியலாது என தெரிவித்த அமைச்சர் சிறுபான்மையினருக்கு பல்கலைக்கழகங்கள் நிறுவ வாய்ப்பு அளிக்க தேசிய சிறுபான்மை கல்விக் கமிஷனின் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்.

புதன், 28 ஜனவரி, 2009

மதரஸா மாணவிகளுக்கு இலவச சைக்கிள்! மாநில அரசு அறிவிப்பு!!


அன்சா தஸ்னீம்
மதரஸாக்கள் மக்களின் அறியாமை இருளை அகற்றி ஆன்மீக வெளிச் சத்தை வழங்கி வருகின்றன. அத்தோடு உலகக் கல்வியிலும் மதரஸாக்களின் பங்கு மகத்தான ஒன்றாக விளங்கி வருகிறது.

மதரஸாக்கள் அனைத்து சமூக மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கி சாதனை படைத்து வருகிறது.

குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் முஸ்­ம் மாணவர்களை விட அதிகமாக ஹிந்து சமய மாணவ. மாணவிகள் மதரஸாக்களில் சேர்ந்து பயன்பெற்று வருகின்றனர் என்பது அண்மையில் நாம் ஊடகங்களில் பார்த்த செய்தியாகும்.


இந்நிலையில் பீகார்மாநில மதரஸாக் களில் மேல்நிலைக் கல்வியை கற்று வரும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிட பீகார் அரசு முடிவு செய்திருக்கிறது.


பீகார் மாநில அரசு 1,119 மதரஸாக் கல்விக் கூடங்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி 4000 மதரஸாக் கல்விக் கூடங்களின் (அரபிக் கல்லூரிகள் உட்பட) ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் களுக்கான ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளையும் பீகார் மாநில அரசே ஏற்றுக் கொள்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. (தமிழக அரசு கவனிக்க)

2,359 மதரஸாக்கள் அரசு உதவி யின்றி நடைபெறுகின்றன.

576 பெண்கள் மதரஸாக்கள் அரசு உதவியின்றி நடைபெறும் கல்வி நிறுவனங்களாகும்.

32 பெண்கள் மதரஸாக்கள் அரசு உதவி பெறும் கல்விக் கூடங்களாகும். இந்தக் கல்விக் கூடங்களில் கல்வி கற்கும் 4000 மாணவிகள் மாநில அரசின் அறிவிப்பின் மூலம் இலவச சைக்கிள் பெறுவார்கள்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மதரஸா மாணவிகளின் பட்டியல்களை தயார் செய்து வருகின்றனர். இத்தகவலை மதரஸா வாரிய சேர்மன் இஜாஸ் அஹ்மத் தெரிவித்திருக்கிறார்.
thanks to: tmmk.in