மத்திய அரசின் சுற்றுலாத்துறையால் உருவாக்கப்பட்ட “உணவக மேலாண்மை, சமையல் கலை மற்றும் ஊட்டநெறி தொழில்நுட்பக் கல்லூரி” சென்னையிலுள்ள தரமணியில் இயங்கி வருகிறது.
இங்கு, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்பு ஆகிய நிலைகளில், விருந்தோம்பல், உணவு விடுதி நிர்வாகம் போன்றவைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில், பணியாளர்களுக்கான திறன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் பின்வரும் பயிற்சிகளை மைய அரசின் சுற்றுலாத்துறை இலவசமாக அளிக்கவுள்ளது.
3 நாட்கள் தேசிய விருந்தோம்பல் திறன் சான்றிதழ் பயிற்சிக்கு வழக்கமான கல்வி, சான்றிதழ் ஏதுமில்லாமல் அனுபவ அறிவுடன் பெரிய, சிறிய உணவகங்களில் பணிபுரியும் நபர்களுக்கு சமையல்காரர் மற்றும் உணவு பரிமாறுபவர்களுக்கான பயிற்சி அளிக்கப்படும். வயது வரம்பு கிடையாது. பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மதிய உணவும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
8 வாரங்களுக்கு உணவு சமையல்கலை பயிற்சிக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 25 வயதுக்குள்ளவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். ஊக்கத் தொகை ரூ.2000 வழங்கப்படுகிறது. மேலும், சீருடை, சமையல் பொருட்கள், பயிற்சிக்கான பொருட்கள் போன்றவையும், மதிய உணவும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
6 வாரம் உணவு பரிமாறும் முறை பயிற்சிக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 25க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊக்கத் தொகை ரூ.1500 வழங்கப்படுகிறது. மேலும், சீருடை, சமையல் பொருட்கள், பயிற்சிக்கான பொருட்கள் போன்றவையும், மதிய உணவும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி வருகின்ற 03.08.2009 அன்று தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு விருப்பமுள்ள நபர்கள் பின்வரும் முகவரியில் உள்ள இந்நிறுவனத்தை வேலை நாட்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
உணவு மேலாண்மை நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி அஞ்சல், சென்னை 600 113 (இந்திரா நகர் இரயில் நிலையம் அருகில்) தொலைபேசி எண் 22542029. கல்லூரியின் தொலைபேசி எண். 044 22542029. இணைய தளம் முகவரி www.ihmchennai.org.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக