புதன், 1 ஜூலை, 2009

ஈரான் - அஹ்மதி நிஜாத் அதிபராகத் தொடருவார்!


ஈரானின் பத்தாவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் அஹ்மதி நிஜாத் முறைகேடுகள் மூலமாக வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டை எதிர் கட்சி எழுப்பியிருந்தது.


ஈரானில் அஹ்மதி நஜாதின் அமோக வெற்றியை எதிர்பாராத சில ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் கூட சில அறிக்கைகள் விடுத்தது. பி. பி. சி செய்தித்தளமும் நஜாத் பங்கெடுத்த பொதுக்கூட்டத்தின் புகைப்படத்தை அவருக்கு எதிரானவர்களுடைய ஆர்ப்பாட்டம் என்று காண்பித்தது. உள்நாட்டுக் கலவரம் வெடிக்கும் அளவுக்கு நிலை மோசமான போது அங்கு தேர்தலை நடத்தும் கார்டியன் கவுன்சில் முறைகேடுகள் நடந்ததாக கருதப்பட்ட பகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த தீர்மானித்தது.

முக்கிய எதிர்கட்சியின் தலைவரும் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான மீர் ஹுஸைன் மூஸாவி ஆகியோரின் கோரிக்கையின் படி பத்து சதவிகித வாக்குகளை மீண்டும் மறு எண்ணிக்கை செய்த பின்னர் அஹமதி நிஜாத் வெற்றி பெற்றதை கார்டியன் கவுன்சில் அதிகார பூர்வமாக அறிவித்தது.

கார்டியன் கவுன்சில் செயலாளர் ஆயதுல்லா ஜன்னதி உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் அஹ்மதி நிஜாதின் வெற்றி செல்லும் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். மேலும் தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கையிலும் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

ஜூன் 12 நடந்த அதிபருக்கான தேர்தலில் 63 சதவிpத வாக்குகபை; பெற்று அஹ்மதி நிஜாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தோர்தலில் முறை கேடு என்ற எதிர்கட்சியினரின் கடுமையான போராட்டத்தினால் சுமார் 17 பேர் மரணமடைந்தனர். தொடர்ந்து நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில் மீண்டும் அஹ்மதி நிஜாத் வெற்றி பெற்றது மட்டுமின்றி பல இடங்களில் அவருடைய வாக்குகள் முன்பைவிட அதிகரித்திருந்தது தெரியவந்தது.

கருத்துகள் இல்லை: