மத்திய நிலத்தடி நீர் வாரியம், ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா ஆகியவற்றில் காலியாக உள்ள ஜியாலஜிஸ்ட் (மண்ணியல் நிபுணர்) பணி இடங்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. எம்.எஸ்சி. ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, மெரைன் ஜியாலஜி படித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது 21 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. இதற்கான விண்ணப்ப படிவங்கள் தலைமை தபால் அலுவலகங்களில் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் ரூ.20 ஆகும்.
மேலும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்திலும் தேர்வு பற்றிய தகவல்களை விரிவாக தெரிந்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை இந்த மாதம் 20 ந் தேதிக்குள் டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக