சனி, 11 ஜூலை, 2009

அத்வானி முக்கியக் குற்றவாளி! லிபரான் ஆணைய வழக்குரைஞர் 'அனுபம் குப்தா' பேட்டி!

பாபரி மஸ்ஜித் இடிக்கப்படு வதற்கான சூழ்நிலை குறித்து, ஆய்வு செய்த நீதிபதி லிபரான் ஆணையத்தின் வழக்குரைஞர் அனுபவம் குப்தா. பாபரி மஸ்ஜித் இடிப்பின் முக்கி யக் குற்றவாளி அத்வானி தான் என அழுத்தம் திருத் தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

'அவுட் லுக்' செய்தி ஏட்டிற்கு அனுபம் குப்தா அளித்த நேர்காணலில், பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு அத்வானியும், அவரது இயக்கமும் தான் முழு முதற் காரணம். அவரது தூண்டுதல் இல்லாமல் பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்டது என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று அனுபம் குப்தா கூறியுள்ளார்.

அத்வானியின் ராமஜென்ம பூமி இயக்கத்தையும், அதன் ஓர் அங்கமான குஜராத் மாநிலம் சோம்நாத் ஆலயத்திலிருந்து அவர் தொடங்கிய ரதயாத்திரை யையும், இந்தியாவின் மதச்சார்பின்மை வரலாற்றுக்கு எதிரான இயக்கம் என அனுபம் குப்தா வர்ணித்துள்ளார். 2001ம் ஆண்டு லிபரான் ஆணையம் முன்பு உள்துறை அமைச்சராக அத்வானி சாட்சியமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1992 டிசலி6ல் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் இடிப்புச் சம்பவம் தேசந் தழுவிய, முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரத் தின் விளைவாகும். இந்த மதவெறிப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தியவர். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.
லிபரான் ஆணைய அறிக்கையின் விளைவாக பாஜக பழைய நிலையிலிருந்து பல்டி யடித்து உண்மை நிலையை மறைத்து தனது மென்மை (?) நிலையைப் பேசியாக வேண்டும். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள்தான் என் வாழ்வின் சோகமான நாள் என்கிற ரீதியில் அத்வானி கதை விட்டது போல மேலும் பல கரடி களை அவிழ்த்து விட வேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடிப்புக் குப் பிறகு 1998 முதல் 2004 வரை 6 ஆண்டுகள் பதவி ருசிகண்ட பாஜக, இந்து, இந்தி, இந்தியா கொள்கை யைக் கைவிட்டு, பன்முகப் பண்பாட்டை நாட்டின் பன் முகத் தன்மையை ஆதரிக்கத் தொடங் கியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யில், மதச்சார்பற்ற கட்சி கள் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என பா.ஜ.க ஆசைப் படுகிறது. லிபரான்ஆணைய அறிக்கை பாஜகவின் மதவெறி சதிகளை அம்ப லப் படுத்துவதால், பெயர ளவு மதச் சார்பற்றக் கட்சி களும் தே.ஜ.கூட்டணில் தொடர் வது கேள்விக் குறியாகிறது.

1999ம் ஆண்டு லிபரான் ஆணையத்தின் வழக்குரைஞராக 2007ம் ஆண்டு வரை எந்த விசாரணை குறித்தும் கலந்தாலோசனை செய்யப்பட வில்லை என்று அவரே தெரிவித்துள்ளார்.

நத்தை முதுகில் சவாரி செய்த லிபரான் ஆணையம் விசாரணை அறிக் கையை தாக்கல் செய்துள்ளது. முக்கியக் குற்றவாளியும், உடன் சிக்கிய பிற குற்றவாளிகளும் தண்டிக்கப் படுவார்களா?

கருத்துகள் இல்லை: