சென்னை, ஜூலை 11- கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர்கள் பொன்னுசாமி, ராஜ்குமார், ஜி.கே.மணி (பாமக), எச். வசந்தகுமார் (காங்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூ), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்) ஆகியோர் கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்:
தமிழ்நாட்டில் 200 தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முழுவதும் அரசின் நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளது. மாநில அளவில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும்போது அந்த தீர்ப்புக்கு கண்டுப்பட வேண்டும்.
கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகமா னோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பு துறை தரும் சீனியாரிட்டி அடிப்படையில்தான் பணி உத்தரவு பிறப்பிக்க முடியும்.
தற்போது உயர்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் நியமனத்தில் கம்ப் யூட்டர் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டனர்.
வருங்காலங்களில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக