புதன், 1 ஜூலை, 2009

உமாபாரதியின் வாக்குமூலமும்-உறங்கும் சட்டமும்!



பாபர் மஸ்ஜித் பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்டபின், பல்வேறு காலகட்டங்களில் போது மேடைகளில் 'நாங்கள் தான் பாபர் மஸ்ஜிதை இடித்தோம். அதற்காக பெருமைப்படுகிறோம் என்று பயங்கரவாதிகள் முழங்கியதுண்டு. அப்போதும் சட்டம் அவர்களை கண்டுகொள்ளவில்லை. இப்போது பதினேழு ஆண்டு கடந்தபின் சமர்ப்பிக்கப்பட்டுள்ள லிபரான் கமிஷன் அறிக்கையை கண்டு 'கிலி' பிடித்துள்ள பாபர் மஸ்ஜித் இடிப்பாளர்கள், தங்களின் பயத்தை மறைக்க வீரவசனம் பேச புறப்பட்டுவிட்டனர்.


லிபரான் அறிக்கை தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் திருவாய்மலர்ந்துள்ள இந்துத்துவா பெண் சாமியாரிணி உமாபாரதி, "பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார். ஒரு நல்ல கமாண்டரைப் போல் இதனைக் கூறுகிறேன். இதனால் என்னைத்தூக்கிலிட்டாலும் எனக்குப் பிரச்சனை இல்லை''என்று கூறியுள்ளதோடு, கரசேவைக்காக அதிக அளவில் தொண்டர்களை அழைத்துவந்த பா.ஜ.க. தலைவர்கள் பாபர் மஸ்ஜித் இடிப்புக்காக மன்னிப்பு கோரக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசலை இடித்ததோடு, அதற்காக மன்னிப்பும் கேட்கமாட்டோம் தூக்குமேடைக்கும் தயார் என்றெல்லாம் பகிரங்க வாக்குமூலத்தை உமாபாரதி அளித்துள்ளார். இதற்கு பிறக்கும் சட்டம் இவர்களை தண்டிக்க முன்வரவில்லையானால், இன்னும் எத்தனை பாபர் மஸ்ஜிதுகளை வேண்டுமானாலும் இடிக்கும் துணிவையும், சட்டத்திற்கு அஞ்சாமல் திமிராக பேசும் துணிவையும் இந்த பயங்கரவாதிகளுக்கு தந்துவிடும். எனவே, சட்டம் தன் கடமையை செய்ய முன்வரவேண்டும் என்பதே மஸ்ஜிதை மீட்க சட்டத்தை நம்பியிருக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் வேண்டுகோளாகும்.

கருத்துகள் இல்லை: