செவ்வாய், 28 ஜூலை, 2009

இடைத் தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு

மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் கூட்டம் இன்று சென்னையில் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

மனிதநேய மக்கள் கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியவுடன் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு 2011ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகமெங்கும் கட்சியை வலுப்படுத்தும் பணியில் மனிதநேய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளது. இச்சூழலில் தமிழக சட்டமன்றத்திற்கு ஐந்து தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் எவ்வித முக்கியத்துவமில்லாத தேர்தல் என மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது. எனவே இந்த இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று தீர்மானிக்கப்படுகின்றது.


இளையாங்குடி தொகுதியில் மனிதநேய கட்சி போட்டியிட வேண்டுமென மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விடுத்த அன்பு வேண்டுகோளுக்கு மனிதநேய மக்கள் கட்சி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி எந்த கூட்டணிக்கு ஆதரவு என்பதை சென்னையில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறவுள்ள தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை: