இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
புதன், 1 ஜூலை, 2009
பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார் : உமாபாரதி!
பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார் என்று பாரதீய ஜனசக்தி கட்சித் தலைவி உமா பாரதி கூறியுள்ளார். இதனால் தனக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தாலும் பிரச்சனை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப் பட்ட லிபரன் விசாரணை ஆணையம் தன்னுடைய விசாரணை அறிக்கையை பிரதமரிடம் இன்று அளித்தது குறித்து, பத்திரிகையாளர்களை தன்னுடைய வீட்டில் சந்தித்த உமாபாரதி, "பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார். ஒரு நல்ல கமாண்டரைப் போல் இதனைக் கூறுகிறேன். இதனால் தன்னைத் தூக்கிலிட்டாலும் எனக்குப் பிரச்சனை இல்லை" என்று கூறினார்.
17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை அறிக்கை பிரதமரிடம் அளிக்கப் பட்டிருப்பது முஸ்லிம்களை சமாதானப் படுத்தவே என்றும் அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலையை அடுத்து 20 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப் பட்டதற்கு ஒருவரைக் கூட குற்றம் சாட்ட காங்கிரஸ் தலைமையிலான அரசால் முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் மன்னிப்புக் கோரக் கூடாது என்றும் அவர்கள்தான் அதிகமான மக்களை அயோத்திக்கு கரசேவைக்கு அழைப்பு விடுத்தனர் என்றும் அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக