சனி, 25 பிப்ரவரி, 2012

இந்திய தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் டெல்லி கருத்தரங்கில் மமக பொதுச்செயலாளர் பங்கேற்பு!

இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 9,10,11 தேதிகளில் மூன்றுநாள் தேசிய அளவிலான பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.

தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் தொகுதி வாரியான தேர்தல் முறைக்கு மாற்றாக ஜெர்மனி, இலங்கை போன்ற நாடுகளில் அமலில் இருக்கும் விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறையை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இம்மாநாடு நடைபெற்றது.

Campaign for Electoral Reforms in India - CERI என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற இம்மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் பல்வேறு பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவரது உரையிலிருந்து சுருக்கமாக...

இந்தியாவில் தற்போது நடைமுறையிலிருக்கும் தேர்தல் முறையில் சிறுபான்மையினரும். ஒடுக்கப்பட்ட மக்களும் தேர்தல் அதிகாரத்தை எளிதில் நெருங்க முடியாத நிலை உள்ளது. யாருடனாவது கூட்டணி வைத்தால் மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

இலங்கை, ஜெர்மனியில் உள்ளதுபோல் தொகுதி வாரி தேர்தல் முறைக்கு மாற்றாக; ஒரு கட்சிக்கு கிடைக்கும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் MP, MLAக்களை பெறும் முறைதான் வரவேண்டும்.

இது போன்ற தேர்தல் முறையை அயோத்திதாசர் பண்டிதர் அப்போதே வலியுறுத்தினார். முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா பாராளுமன்றத்தில் இது குறித்து பேசியபோது, அப்போதையை பா.ஜ.க. வின் சட்ட அமைச்சர் அருண்ஜெட்லி அது இந்தியாவுக்கு ஆபத்தானது என்று நிராகரித்தார்.

இத்தேர்தல் முறையை கொண்டு வரவும், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவும் மனிதநேய மக்கள் கட்சி எல்லா வகையிலும் உதவும் என்றார்.

இது குறித்து CERI அமைப்பு வெளியிட்ட நூலை தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி வெளியிட்டார்.

இரண்டாம் நாள் அமர்வில் சச்சார் அறிக்கையை சமர்பித்து உலகப்புகழ் பெற்றவரான நீதீபதி ராஜேந்திர சச்சார் உரையாற்றினார். அவருடன் மமக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உரையாடினார்.

சச்சார் அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் நிலையை துல்லியமாக அம்பலப்படுத்தினீர்கள். 20 கோடி முஸ்லிம்களும் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம் என அவரிடம் கூறியதும், அவர் அப்படி நான் என்ன பெரிதாக செய்து விட்டேன் என்றார். இன்றைய இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து இருவரும் உரையாடினார்கள். அப்போது மக்கள் உரிமை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஜி.அத்தேஷ் உடன் இருந்தார்.

மூன்று நாள் நடைபெற்ற மாநாடு நாடு தழுவிய பிரச்சாரத்திற்கு வழிகோலியிருக்கிறது.


நிகழ்ச்சியில் உரையாற்றும் தேர்தல் ஆணையர் குரேஷி


சச்சாருடன் பொதுச் செயலாளரும், அத்தேஷ்வும்


நீதியரசர் ராஜேந்திர சச்சாருடன்


மாநாட்டில் பொதுச் செயலாளர்

கருத்துகள் இல்லை: