பாசிச ஹிந்துத்துவா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாசிச ஹிந்துத்துவா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 பிப்ரவரி, 2012

ராமனை எலக்க்ஷன் ஏஜன்டாக பயன்படுத்தும் ப ஜ க ?

அயோத்தி: ஜாதீய காரணிகள் முடிவை தீர்மானிக்கும் உ.பி மாநில தேர்தலில் வகுப்புவாத பிரிவினை மூலமாக வாக்குகளை கவர பா.ஜ.க நடத்திவரும் முயற்சிகள் தோல்வியை தழுவும் என கருதப்படுகிறது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் புராண ராமனின் கோயிலை கட்டுவது, சிறுபான்மை இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பா.ஜ.கவின் பிரச்சாரம் போதுமான சலனத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை.

உமாபாரதியை கட்சியில் சேர்த்ததும், ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிய பகுஜன் சமாஜ் தலைவர்களை கட்சியில் இணைத்ததும் முன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்கு பா.ஜ.கவில் உட்கட்சி பூசலை உருவாக்கியுள்ளது.

80 எம்.பிக்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் உ.பியில் பா.ஜ.கவின் நிலை பரிதாபமானால், 2014 ஆட்சி கனவு அதோகதிதான்! இதனை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தலைமை உ.பி.யில் முகாமிட்டுள்ளது.

முன்னாள் மத்தியபிரதேச முதல்வர் உமாபாரதியை உ.பி அரசியல் களத்தில் இறக்கியதன் நோக்கம் வகுப்புவாத வெறியை தூண்டுவதற்காகும்.முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்டு பெரும்பான்மை உணர்ச்சியை தூண்டுவதும் பா.ஜ.கவின் திட்டமாகும். மேலும் அயோத்தியில் ராமனுக்கு கோயில் போன்ற ஹிந்துத்துவா அஜண்டாக்களையும் தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க வெளியிட்டது. ஆனால், இவையெல்லாம் அயோத்தியில் கூட பா.ஜ.கவுக்கு போதிய ஆதரவை பெற்றுத் தரவில்லை.

அயோத்தியின் டீ கடை பெஞ்சுகளில் கூட பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை குறித்துதான் மக்கள் விவாதிக்கின்றனர். அயோத்தி அடங்கிய ஃபைஸாபாத் மக்களவை தொகுதியில் கடந்தமுறை காங்கிரஸ் கட்சி எதிர்பாராத வெற்றியை பெற்றது. ஹிந்துத்துவா உணர்வை தூண்டிய பிறகும், அடித்தளமே ஆட்டம் கண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஃபைஸாபாத் மக்களவை தொகுதியில் மக்கள் அக்கட்சிக்கு அளித்தது பா.ஜ.கவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அயோத்தியா சட்டப்பேரவை தொகுதியில் ஐந்து தடவை வெற்றிபெற்ற லல்லுசிங் என்பவர்தாம் இம்முறையும் போட்டியிடுகிறார். ஆனால், கடுமையான போட்டி நிலவும் அயோத்தியில் லல்லுசிங் வெற்றி கேள்விகுறிதான். பல சன்னியாசிகளும் பா.ஜ.கவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ’தேர்தல் வரும் வேளையில் மட்டும் பா.ஜ.க ராமர் கோயிலை கூறி நாடகமாடும். ராமனை வெறும் எலக்‌ஷன் ஏஜண்டாக தரம் தாழ்த்திவிட்டது பா.ஜ.க’- என கொதிக்கிறார் ஆல் இந்தியா அகாடா பரிஷத் சேர்மன் மஹந்த் க்யான்தாஸ்.

கல்யாண் சிங்கைப் போல பிற்பட்ட மக்களின் பல்ஸை அறியும் தலைவர்கள் பா.ஜ.கவில் இல்லாதது அக்கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாகும் என அயோத்தி மற்றும் அதன் சுற்று வட்டார பா.ஜ.க தொண்டர்கள் கருதுகின்றனர். கடந்த முறை 51 தொகுதிகள் மட்டுமே பா.ஜ.கவுக்கு கிடைத்தது. இம்முறை காங்கிரஸ் கட்சியை விட குறைவான இடங்களே கிடைக்கும் என்ற கவலை கட்சியை வாட்டுகிறது.

சனி, 6 ஆகஸ்ட், 2011

ஹிந்துத்துவா ஒரு தேசிய அபாயம்! ப. சிதம்பரம்!

புதுடெல்லி: ஹிந்துத்துவா வலதுசாரித் தீவிரவாதக் குழுக்கள் ஆபத்து நிறைந்த வையாகும். எனவே வலதுசாரித் தீவிரவாத்துக்கு எதிராகவும் உறுதியுடனும் அச்சப்படாமலும் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

ஹிந்துத்துவா வலதுசாரித் தீவிரவாதமும் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு உள்நாட்டு எதிரியுமாகும். அதை எதிர்நோக்கும் வகையில் உளவுப் பணிகளைப் பாதுகாப்புப் படையினர் வலுப்படுத்த வேண்டும். அவ்வாறான தீவிரவாதம் உருவாகக் காரணமானவற்றைக் கண்டறிந்து அவற்றைக் களைய பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இணையதளம் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இளைஞர்களைத் தங்கள் இயக்கத்தில் சேர்க்க ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. பல கட்டங்களில் எதிரிகளை நம்மால் எளிதில் அடையாளம் காணமுடிவதில்லை. எனவே சாதாரண மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மற்றும் அதன் துணை அமைப்புகள் உலெகெங்கும் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றன. இவை இந்தியாவின் ஒற்றுமையை குலைத்து மத துவேசத்தை ஏற்ப்படுத்தி இந்தியாவை மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி தள்ளும் சக்திகளாக செயல்பட்டு வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 டிசம்பர், 2010

இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது ?

கோழிக்கோடு,டிச.12:குஜராத்தில் இனப்படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகள் கழிந்த பிறகும் குஜராத் முஸ்லிம் சமூகம் சாதாரண நிலையை இதுவரை அடையவில்லை என பிரபல மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார்.இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது. துயர்துடைப்பு நடவடிக்கைகளுக்கோ, இழப்பீடுகளை வழங்குவதற்கோ அரசு ஆர்வம் காண்பிக்கவில்லை.

அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையில் குஜராத் அரசிற்கும் பங்கிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சமுதாயமாக மாறியுள்ளனர். பல வழக்குகளும் நீதிமன்றத்தை அடையவில்லை. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது போன்ற சோதனைதான் குஜராத் இனப்படுகொலையும். ஆனால், இதற்கெதிராக மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் உறுதியாக நின்று போராடியதன் காரணமாக சில வழக்குகளிலாவது வெற்றிக் கிடைத்துள்ளது.

காங்கிரசும், பா.ஜ.கவும் ஆதிக்கம் செலுத்தும் குஜராத்தில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேரவேண்டும் என்ற துர்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வாக்கு பதிவு குறைவதும், ஏகாதிபத்திய முறையில் தேர்தல் நடப்பதாலும் மோடியால் வெற்றி பெறமுடிகிறது.