புதன், 18 பிப்ரவரி, 2009

சென்னையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட





தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக தமுமுக பொதுச் செயலாளர்
செ. ஹைதர் அலி அவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பொறுப் பேற்றார். அப்போது பத்திரிகையாளர் களை சந்தித்த அவர், ''ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் வக்ப் நிலங்களை மீட்பதுதான் எனது முதல் பணி'' என்று சூளுரைத்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி யிருக்கும் நிலங்கள் பற்றிய விவரங்களை சேகரித்தார். அப்போது சென்னையில் கடற்கரை அருகே திருவல்லிக்கேணி யில் டாக்டர் பெசன்ட் சாலையில் திவான் சாஹிப் கபரஸ்தான் வக்புக்குச் சொந்தமான 25 கிரவுண்டு நிலம் 1917ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பதும் அதை மீட்டெடுக்க நீதிமன்றங்கள் மூலம் முயற்சிக்கப்பட்டும் அது தோல்வியில் முடிந்துள்ளதும் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இதனை மீட்டெடுக்கும் பணியில் வாரியத் தலைவர் தீவிரம் காட்டினார்.




இந்த வக்ப் நிலத்தில் அருணா கார்டன் என்ற பெயரில் தோட்டத்தை உருவாக்கி அதனை வாகனங்களை பார்க்கிங் செய்யும் இடமாக ஆக்கிரமிப் பாளர்கள் உபயோகித்து நான்கு தலை முறையாக லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வந்துள்ளனர். மேலும் மூன்று அடுக்கு மாடி வீட்டையும் கட்டியுள்ள னர். ஆக்கிரமிப்புக்குள்ளான நிலத்தின் மதிப்பு ரூ.50 கோடியாகும்.


இந்த வக்ப் நிலத்தை காலி செய்து வாரியத்திடம் ஒப்படைக்குமாறு பிறப் பிக்கப்பட்டிருந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருந்த வழக்கு கடந்த 11.02.2009 அன்று தள்ளுபடி ஆனது. இதையடுத்து வக்ப் வாரிய தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. மைதிலி ராஜேந்திரனை தொடர்பு கொண்டு போர்க்கால அடிப்படையில் செயலாற்றி நிலத்தை மீட்டு வாரியத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மைலாப்பூர், திருவல்லிக்கேணி வட்டாட்சியர் திரு. ரவிச்சந்திரனிடம் உடனடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டார். மேலும் பகுதி காவல் துணை ஆணையரை தொடர்பு கொண்டு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கு மாறும் கேட்டுக் கொண்டார்.


இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் காவலர்கள் துணையுடன் கடந்த 12.02.2009 அன்று ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் வக்ப் வாரிய ஊழியர்கள் ஏராளமானோர் இருந்தனர். இந்த விஷயத்தை கேள்வி யுற்ற திருவல்லிக்கேணி மற்றும் மைலாப் பூர் பகுதி தமுமுகவினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். சம்பவ இடத்திற்கு வருகைதந்த வாரியத் தலைவர், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியைப் பார்வையிட்டுச் சென்றார்.


பரபரப்பான கட்டத்தில்...


பகல் 2.00 மணியளவில் அங்கு பார்க்கிங் செய்யப்பட்டிருந்த வாகனங் களை அப்புறப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டது. நான்கு சக்கர வாகனங் களை அப்புறப்படுத்தும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதன்மூலம் சுமார் 40 கார்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் அப்பகுதி மக்களின் உதவியுடன் 30 ஆட்டோக்கள், 50 இருசக்கர வாகனங் களை வக்ப் வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள். தொடர்ந்து ஜே.சி.பி. வாகனம் வரவழைக்கப்பட்டு, அங்கு கட்டப்பட்டிருந்த கூடாரங்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. இவையனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.


இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக அப்பகுதி பொதுமக்கள் குவிந்ததால் திருவல்லிக்கேணி பகுதி முழுவதும் பரபரப்பு காணப்பட்டது.


இதனிடையே சுமார் ஒன்றரை கிரவுண்ட் நிலத் தில் கட்டப்பட்டிருந்த மூன்று அடுக்கு மாடியிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று அவர்கள் கோரியதால் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் 12 மணி நேரம் கால அவகாசம் வழங்கினார். இதையடுத்து அதை மட்டும் விடுத்து 23 1/2 கிரவுண்டு நிலத்திற்கான முக்கிய நுழைவு வாயிலை பூட்டி வட்டாட்சியர் சீல் வைத்தார்.




மீட்கப்பட்ட இடம் தாசில்தார் முன்னிலையில் சீல் வைக்கப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து கடந்த 13.02.2009 அன்று காலை 10 மணியளவில் மீண்டும் வட்டாட்சியர் காவல்துறை படையுடன் அப்பகுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே திமுக கவுன்சிலர் காமராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டாட்சியரை சூழ்ந்து கொண்டு அவரைப் பணி செய்யவிடாமல் தடுத்த னர். இதற்கிடையே ஆக்கிரமிப்பாளர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகி தடை யாணை பெற முயன்றனர். வக்ஃப் வாரிய வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக் கவே வீட்டை காலி செய்ய ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி நீதிபதி உத்தர விட்டார்.


ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தனர். இதற்கு முன்னர் இருந்த வக்ப் வாரிய தலைவர்கள் எடுத்த முயற்சியெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல ஆனது. வக்ப் இடம் இப்படி அநியாயமாக கைவிட்டுப் போகிறதே என்று நாங்கள் வருத்தத்தில் இருக்கையில் தற்போதைய வாரியத் தலைவர் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு இந்த நிலத்தை மீட்டு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார் என்று மகிழ்ச்சி பொங்க கூறினர். பல ஜமாஅத் பெரியவர்கள் ஒன்றுகூடி இதுகுறித்து பேசுகையில் உணர்ச்சி மிகுதியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். மேலும் அவர்கள், நிலத்தை மீட்டதோடு நின்றுவிட்டால் மீண்டும் இதனை ஆக்கிரமிக்க முயற்சிப்பார்கள். எனவே இதனை முஸ்லிம்களுக்கு பயனுள்ள வகையில் மருத்துவமனையோ, மேல் நிலைப் பள்ளியோ, ஐ.டி.ஐ. நிறுவனமோ, திருமண மண்டபமோ கட்ட வேண்டும் என்றார்கள். வேறு சிலர், இப்பகுதியில் வணிக வளாகம் கட்டினால் வக்புக்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கும் என்றனர்.


வாரியத் தலைவரின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொதுமக்கள்
ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


கடந்த அதிமுக ஆட்சியின் போது வாரியத் தலைவராக இருந்த திருமதி. பதர் சயீத் அவர்கள் சென்னை ராயபுரம் கௌஸ் முகைதீன் பேட்டை என்கிற ஜி.எம்.பேட்டையில் உள்ள காஜி சர்வீஸ் இனாம் (எ) முகமதியர் கபரஸ்தான் வக்ஃபுக்குச் சொந்தமான நிலத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 552 குடியிருப்புகளைக் கட்டுவதற்கு வக்ஃப் நிலத்தை ஒப்படைத்தார். இந்த 552 குடியிருப்பு களில் 452 குடியிருப்புக்களை மீனவர் களுக்கு ஒதுக்கிவிட்டு மீதியுள்ள 100 குடியிருப்புக்களையும், பெருங்குடியில் கட்டப்பட்டுள்ள 276 குடியிருப்புக் களில் 176 குடியிருப்புக்களையும் வக்ஃப் வாரியத்திற்கு ஒதுக்கி, ஒதுக்கீடு உரிமை மற்றும் வாடகை வசூலிக்கும் உரிமையை தன் வசம் எடுத்துக் கொண்டு அதற்கான விண்ணப்பங் களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டது.

வாரியத்தின் மற்றொரு சாதனை!இந்த விஷயம் தன் கவனத்திற்கு வந்தபோது வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள், குடியிருப்புக் களை குடிசை மாற்று வாரியம் கட்டி யிருந்தாலும் அந்த நிலம் வக்புக்குச் சொந்தமானது என்பதைக் கவனத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட 100 குடியிருப்புக்கள் உட்பட 276 குடியிருப்புக்களின் ஒதுக்கீடு உரிமை, வாடகை வசூலிக்கும் உரிமை என அனைத்து உரிமைகளையும் வாரியத் திற்கு ஒதுக்கக் கோரி வாரியக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். மேலும் இதுதொடர் பாக தமிழக முதல்வரையும், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்தும் இதனை வலியுறுத்தினார். வக்ஃப் வாரியத் தலை வரின் தொடர் முயற்சிகளின் பயனாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்து மேற்குறிப்பிட்ட 276 குடி யிருப்புகளை வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்து, இந்தக் குடியிருப்புக்களின் ஒதுக்கீட்டு உரிமை, வாடகை வசூலிக்கும் உரிமை என அனைத்து உரிமைகளையும் தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பாராட்டுக்குரியவர்கள்.

இதுகுறித்து வக்ப் வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள் கூறுகையில்
,

''இந்தப் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வக்ஃப் வாரியத்திற்கு ஆதரவாக 11.02.2009 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை களை மேற்கொண்டோம். அதன் பயனாக மறுநாளே (12.02.2009) வட்டாட்சியர் உதவியுடன் ஆக்கிர மிப்புகளை அகற்றியுள்ளோம்.

இந்த விஷயத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. மைதிலி ராஜேந்திரன் அவர்களின் பணி மகத்தானதாகும். வட்டாட்சியர் மூலம் அவர் எடுத்த உறுதியான நடவடிக்கை களே ஒரே நாளில் 24 கிரவுண்டு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை அவர் நிரூபித்து விட்டார். (திருமதி. மைதிலி ராஜேந்திரன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி திரு. கருப்பன் ஐ.ஏ.எஸ். அவர்களின் மகளாவார்).

சென்னையின் முக்கியப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இந்த நிலத்தை பார்த்த போது அதிர்ச்சி யடைந்து இதனை மீட்டே ஆக வேண்டும் என்று உறுதியுடன் நடவடிக்கைகளை எடுத்தேன். இந்த நிலத்தை மீட்டெடுக்க நீதிமன்றத்தின் உதவி மிக அவசியம் எனக் கருதி யதால் தமிழ்நாட்டில் சிறந்த வழக்கறி ஞர்களில் ஒருவரான திரு. லஷ்மி நாராயணன் அவர்களிடம் இந்த வழக்கை ஒப்படைத்தேன். அவர் இந்த வழக்கை மிகுந்த ஈடுபாட்டோடு அணுகி, இந்த வழக்கில் வக்ப் வாரியத்திற்கு வெற்றியைத் தேடித் தந்தார். மேலும் ஆக்கிரப்பாளர்கள் தடையாணைப் பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தை அணுகியபோது அவர் அருகிலிருந்து தடையாணை கிடைக்கவிடாமல் செய்தார். மேலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலமும், மூன்று அடுக்கு மாடி இருக்கும் இடமும் வக்ஃபுக்குச் சொந்தமானது என்று நீதிமன்றம் பதிவு செய்துள்ளது'' என்று கூறிய வாரியத் தலைவர், ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் வீட்டை காலி செய்ய ஒரு மாத கால அவகாசத்தை நீதிமன்றம் அளித்துள் ளது. இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்து தடையாணை பெற முயற்சிக்கும் வாய்ப்பு உள்ளதால் அதை முறியடிப் பதற்கான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் வக்ஃப் வாரியத்தின் நன்மைக்காக திரு. லஷ்மி நாரா யணன் அவர்களை தான் நியமித்த போது அதனை சிலர் கடுமையாக விமர்சித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

thanks to :tmmk.in

கருத்துகள் இல்லை: