புதன், 18 பிப்ரவரி, 2009

புளியங்குடி அப்துர் ரஷீத் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்!




நெல்லை மாவட்டம் புளியங்குடி கீழப்பள்ளி வாசல் ஜமாஅத்தை சார்ந்தவர் அப்துர் ரசீத். சாதாரண டீக் கடை மூலமாக தனது குடும்பத்தை நடத்தி வந்தார். 2000 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் புளிங்குடியில் இருந்து பாளையங் கோட்டை கிரசண்ட் நகருக்கு தப்லீக் குழுவினருடன் இஸ்லாமிய ஊழியம் செய்வதற்காக புறப்பட்டார். காலை சஹர் உணவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நேரம் அது. கைகளில் அரிவாள், கூர்மையான கத்திகளுடன் பள்ளிவாசலுக்குள் திபுதிபுவென புகுந்த சங்பரிவார கும்பல் ஒன்று கண் இமைக்கும் நேரத்திற்குள் அப்துர் ரஷீத் மீது வெடிகுண்டை வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.

பள்ளிவாசலில் நடந்தேறிய இந்த படுகொலை சம்பவம் தமிழக முஸ்­ம் களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அவரின் படுகொலையைக் கண்டித்து புளியங்குடி, தென்காசி, மேலப் பாளையம், நெல்லை உள்பட தமிழகத் தின் பல பகுதிகளில் போராட்டங்கள் வீரியமாக நடைபெற்றன. தடையை மீறிய ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் வீரியமான போராட்டங்கள், பேரணி என போராட்டங்கள் பல கட்டங்களை எட்டியது. இதனை ஒடுக்குவதற்காக அன்றைய நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி) கண்ணப்பன் ஆங்காங்கே விக்ரக பீடங்களில் உடைப்பு ஏற்படுத்தி, அநியாயமாக மேலப்பாளையம் ரசூல் மைதீன் உள்ளிட்ட 4 தமுமுகவினர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அத்தோடு மட்டுமில்லாமல் கடையநல்லூர் காவல்துறை உதவியாள ராக இருந்த சக்கரவர்த்தி, மைதீன் பிச்சை மற்றும் மாரியப்பனை அடித்து சித்தர வதை செய்து தாங்கள்தான் குற்றவாளி கள் என வாக்குமூலம் வாங்கி இந்த கொலை வழக்கின் திசையை மாற்றினர். இதில் மைதீன் பிச்சை என்பவர் படு கொலை செய்யப்பட்ட அப்துல் ரஷீதின் மகன் ஆவார். மகனே தந்தையை படு கொலை செய்த பயங்கரம் என தமிழக மக்களின் மனநிலையை மாற்ற காவல் துறை நடத்திய மாபெரும் நாடகம் அது. சங்பரிவார கும்பல்களின் சதியை மறைத்து அப்துர் ரஷீதின் கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது காவல்துறை.

அடக்குமுறைக்கு எதிராகவே களம் கண்டு வந்த தமுமுக காவல்துறையின் சதியை மக்கள் மன்றத்தில் அம்பலப் படுத்த பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதன் ஒரு பகுதியாக மேலப்பாளையத்தில் அப்துர் ரஷீதின் படுகொலைக்கு நீதி கேட்டு சுமார் 30,000க்கும் மேற்பட்ட முஸ்­ம்கள் கலந்து கொண்ட கண்டன பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி '' 15 நாட்களுக்குள் உண்மை குற்றவாளி களை பிடிக்கவில்லையெனில் தொடர்ச்சி யான சிறை நிரப்பும் போராட்டங்களின் மூலம் தமிழகத்தையே ஸ்தம்பிக்க செய்வோம் எனக் கூறினார். தமுமுகவின் சிறை நிரப்பும் போராட்ட அறிவிப்பின் எதிரொ­யாக தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி உத்தர விட்டது. மைதீன் பிச்சை மற்றும் மாரியப்பன் குற்றவாளி இல்லையென நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட னர். ஆனால் அரசு அறிவித்த உதவித் தொகை ரூ. 2 லட்சம் மற்றும் அரசு வேலையும் அந்த குடும்பத்திற்கு வழங் காமல் காலங்கடத்தப்பட்டது. இதைக் கண்டித்து தமுமுக தொடர்ச்சியான கண்டனப் போராட்டங்களை நடத்தியது.

போராட்டத்தின் ஒரு பகுதியாக அப்துர் ரஷீத் கொலை வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டி கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் ஒன்று கடையநல்லூரில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடந்தது. இதில் 3,000க்கு மேற்பட்ட முஸ்­ம்கள் கலந்து கொண்டனர். நெல்லை பாளையங்கோட்டையில் அடைமழையையும் பொருட்படுத்தாது தமுமுக சார்பாக அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக் கானோர் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் 18.12.2008 அன்று தமிழக காவல் துறை தலைவர் ஜே.பி. ஜெயின் நெல்லை வந்தபோது தமுமுக நிர்வாகிகள் அவரை சந்தித்து நிறுத்தி வைக்கப்பட்ட உதவித் தொகையை வழங்க வலியுறுத்தினர். இதன் விளைவாக கடந்த 09.02.2009 அன்று அப்துர் ரஷீத் குடும்பத்தாருக்கு நஷ்ட ஈட்டுத் தொகையான ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை அரசு வழங்கியது.


என் வாழ்வில் இருளை கிழித்து ஒளியை கொடுத்ததே தமுமுக தான்!
''நானும் எனது தந்தையும் தான் டீக் கடை நடத்தி வந்தோம். எனது தந்தையையே நான் கொன்று விட்டதாக கூறி காவல்துறை என்னை கைது செய்தது. ஆனால் அல்லாஹ்வின் உதவியால் தமுமுகவினர் என்னைக் காப்பாற்றி காவல்துறையின் பொய் முகத்தை கிழித்தனர். என் வாழ்வில் இருளை அகற்றி ஒளி ஏற்றியது தமுமுகதான்'' என்றார்.

கருத்துகள் இல்லை: