
ஃபாஸ்ட் புட் எனப்படும் வேக உணவுக் கலாச்சாரம் நகரப்பகுதிகளில் கிட்டத்தட்ட 70 சதவீதம் ஆக்கிரமித்துவிட்டது.
தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் சின்னச் சின்ன நகரங்களிலும் இன்றைக்கு ஃபாஸ்ட் புட் கடைகளில் சுறுசுறுப்பாக வியாபாரம் நடக்கிறது.
சாப்பிட ருசியாக இருந்தாலும், இந்த வேக உணவுகள் பல்வேறு வியாதிகளை இழுத்துவிடும் சாத்தியம் ஏராளமாக உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலைமுறையினர் தொடர்ந்து ஃபாஸ்புட் உணவு வகை சாப்பிட்டு வருவதால் 50 வயது வரும்போது கேன்சர் உள்ளிட்ட நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கும் இரண்டாம் தர ரீதியிலான நீரிழிவு நோய் வரவும் இந்த வேக உணவுகள் வித்திடுகின்றன. பெண்களுக்கு எலும்புருக்கி நோய், இரத்த சோகை என பல தொல்லைகள் ஃபாஸ்ட் புட்டால் வருகின்றன.
2007 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த சர்வேயில் பாஸ்புட் கலாச்சாரத்தால் அங்கு மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 75 சதவீதம். இதே போன்றதொரு கணக்கெடுப்பை பெங்களூர் மற்றும் மும்பையில் மேற்கொண்டபோது, 50 சதவீத நோயாளிகள் ஃபாஸ்ட் புட் உணவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
மேலும் பல்வேறு நாடுகளில் குந்தைகளிடம் நடத்தப்பட்ட 60க்கும் மேற்பட்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளிலும் இதய நோய் மற்றும் கேன்சர் இளம் வயதிலேயே தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக உணவியில் மற்றும் உணவு அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக