புதன், 16 பிப்ரவரி, 2011

குஜராத் + மனித உரிமை + மோடி !!! ஒரு பார்வை!!

கோத்ரா,பிப்.15: 2002-ல் குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தின் போது பஞ்சமகால் மாவட்டத்தில் 28 முஸ்லிம்களை கொன்று புதைத்து விட்டார்கள். இந்த புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து அதன் மூலம் குஜராத் கலவரத்தின் போது முஸ்லிம்கள் ஆயிர கணக்கில் கொல்லப்பட்டு இதுபோல் புதைக்கபட்டார்கள் என்ற உண்மையை பிரபல மனிதவுரிமை ஆர்வலர் தீஸ்தா செடல்வாட் வெளி கொண்டுவந்தார். இதன் காரணமாக பயங்கரவாதி மோடியின் அரசு இவர் மீது பொய் வழக்கு தொடர்ந்தது. இதனால் இந்த வழக்கில் போலீஸ் தன்னை கைது செய்யக்கூடும் என்று கருதிய தீஸ்தா, முன் ஜாமீன் கோரி குஜராத் கலவர வழக்கை விசாரிக்கும் விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு செவ்வாய்க்கிழமை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. குஜராத் முதல்வர் பயங்கரவாதி மோடி குஜராத் இனப்படுகொலை விசாரணைகளை தொடரவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார்.இந்த விசாரணைகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றவேண்டும் என்று மனித வுரிமை அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. ஹிட்லர் போன்ற உலகம் அறிந்த பயங்கரவாதிகள் பட்டியலில் மோடியின் பெயரும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிட தக்கது. குஜராத் விசயத்தில் நீதி கிடைக்க NCHRO - போன்ற மனித வுரிமை அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: