
போபால்: மலேகான் குண்டு வெடிப்பு வழக்கி்ல் போபால் ஜெயிலில் உள்ள முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா சாத்வி பிரக்யா சிங் தாகூரை , மத்திய பிரதேச மாஜி முதல்வர் ஹிந்துத்துவா உமாபாரதி சந்தித்து பேசினார். கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இது தொடர்பான வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாதி பெண் சாமியார் சாத்விபிரக்யாசிங் தாகூர் என்பவர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது போபால் சிறையில் உள்ளர். இந்நிலையில் மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனசக்தி கட்சித் தலைவருமான உமாபாரதி அவரை சிறையில் சென்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பிற்கு பின், உமாபாரதி கூறுகையில், பிரக்யாசிங் தாகூர் ஒரு அப்பாவி பெண் மகாராஜ் அவ்தேசஷ் ஆன்ந்த என்பவரின் அமைதி தியானத்தை பின்பற்றுபவர். அவரை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அவருக்கு எந்த தொடர்பு இருக்காது இவ்வாறு அவர் கூறினார். இந்த உமாபாரதி ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இவர் பார்மசூதி இடிப்பில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிட தக்கது. ஒரு முன்னாள் முதல்வர் ஒரு பயங்கரவாத இயக்கத்தின் சாமியாருக்கு வெளிப்படையாக ஆதரித்து கருத்து சொல்லி இருப்பது பேரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.