பாபர்மஸ்ஜித் இடிக்கப்பட்டவுடன் இந்திய அளவில் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வும், இந்தியாவில் முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் வழிபாட்டு உரிமையை காக்கவேண்டிய கடமை நமக்கு உள்ளது என்ற எண்ணமும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. அதேபோல நீண்ட காலத்திற்கு பின் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு அரசியல் விழிப்புணர்வு இந்த தேர்தலில் ஏற்பட்டுள்ளது.
நம்முடைய உழைப்பையும், வாக்கு வங்கியையும் கொண்டு வளமடைந்த அரசியல் கட்சிகள் குறிப்பாக அண்ணா தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகள் முஸ்லீம்சமுதாயத்தை புறக்கணித்து , தி.மு.க. தன் கட்சி சார்பாக ஒரு முஸ்லிமை நிறுத்தவில்லை. மாறாக தோழமை கட்சியான முஸ்லீம் லீக்கை கூட உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு நிர்ப்பந்தித்து அந்த தொகுதியையும் தனதாக்கி கொண்டது.
அண்ணா தி.மு.க தனது வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிமை கூட நிறுத்தவில்லை. பின்பு வேறு சில நோக்கத்தோடு மத்திய சென்னையில் மட்டும் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் வழக்கம்போல ஆருனை மட்டும் நிறுத்தியுள்ளதுக்கு காரணம் அந்த தொகுதியில் வலுவான வேறு வேட்பாளரின்மைதான். பா.ம.க.வும், முஸ்லிமுக்கு வாய்ப்பளிக்கவில்லை.
வை. கோ. தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டபோது அதை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து நிரந்தர நரகை வை.கோ வுக்காக அடைந்த ஒரு முஸ்லீம், அவன் சார்ந்த சமுதாயத்திற்கு வை.கோ. வாய்ப்பளிக்கவில்லை. கம்யூனிஸ்டுகள் சொல்லவே வேண்டாம். திரையில் நம்மை தீவிரவாதிகளாக சித்தரித்தாலும் நிஜத்தில் நம் சமுதாயத்தை சார்ந்த இருவரை விஜயகாந்த் நிறுத்தியது ஒருபுறம் மகிழ்ச்சிதான் எனினும், அவ்வாறு அவர் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியத்துக்கு காரணமும் வேறு வலுவான வேட்பாளர் இல்லாததுதான். இப்படி நம்மை புறக்கணித்து அரசியல் கட்சிகள் களம்கானும் நிலையில், முஸ்லிம்கள் இதை மானப்பிரச்சினையாக எடுத்துக்கொண்டு சாமானியர்கள் 'எங்கள் ஒட்டு முஸ்லிம்களுக்கே' என்று முடிவெடுத்திருந்தாலும், சமுதாய தலைவர்களின் நிலையோ, முஸ்லிம்களின் மானப்பிரச்சினையை விட அவர்களின் சுய அரசியல் வாழ்வும், பகைமை உணர்வும்தான் அவர்களிடம் விஞ்சி நிற்கிறது.
நீண்ட நெடுங்காலமாக அண்ணா தி.மு.க. கூட்டணியில் இருந்த தேசியலீக்[பஷீர்பிரிவு] தனக்கு சீட் ஒதுக்கப்படாததால் கோபம்கொண்டு அண்ணா தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி, தனது சமுதாயத்திற்கே சீட் ஒதுக்காத தி.மு.க. கூட்டணியில் சரணடைகின்றது. 'நாங்கள் தேர்தலில் போட்டியிடமாட்டோம் ஆனால் சமுதாய நலன் கருதி அரசியல் நிலைப்பாடு எடுப்போம்' என்று சொன்ன ஒரு தவ்ஹீத் அமைப்பு, மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறுக்கனும் என்ற பழமொழிக்கு ஏற்ப, சமுதாயம் எப்படி போனால் எனக்கென்ன! என்னுடய பகைவர்களான த.மு.மு.க.வினரை அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்களை மண்ணை கவ்வ வைத்து, முஸ்லிமல்லாதவர்களை வெற்றி பெற 'களமிறங்க' போகிறார்களாம். இப்படி எல்லாம் ஒரு புறம் கூத்துக்கள் நடந்து உலக அரங்கில் முஸ்லிம்களின் ஒற்றுமையின்மையை வெளிச்சம்போட்டு காட்டிவரும் நிலையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இறை அச்சத்துடன் ஒரு அற்புதமான முடிவை அறிவித்துள்ளது.
முஸ்லீம்கள் அரசியலில் தனி அதிகாரம் பெற மனிதநேய மக்கள் கட்சி களம் இறங்கியுள்ளது. எனவே, மயிலாடுதுறை, ராமநாதபுரம், பொள்ளாச்சி, மத்திய சென்னை, திருச்சி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் தமிழக முஸ்லீம் சமூக ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு தருவோம் என்று தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது. இவ்வாறு முஹம்மத் முனீர் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் கருத்து வேற்பாடுகள் இருப்பினும், த.மு.மு.க.வுக்கு ஆதரவு என்ற இ.த.ஜ.வின் முடிவு உள்ளபடியே வரவேற்கத்தக்கது. தனிப்பட்ட கொள்கை வேறுபாடு இருப்பினும் பொதுப்பிரச்சினையில் சமுதாய நலன் சார்ந்த பிரச்சினையில் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற அற்புதமான வழிகாட்டுதலை இ.த.ஜ. நடைமுறை படுத்தியிருக்கிறது. மேற்கண்ட ஏழுதொகுதிகள் மட்டுமல்லாது ஏனைய தொகுதிகளிலும் முஸ்லிம்கள் போட்டியிட்டால் அவர்களையும் ஆதரிக்க இ.த.ஜ. முன்வரவேண்டும். மேலும் இதுபோன்று வருங்காலத்திலும், பாபர் மஸ்ஜித் மீட்பு மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள்- பாதுகாப்பு- சமுதாயநலன் சார்ந்த விஷயங்களிலும் இ.த.ஜ. உள்ளிட்ட அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் ஒன்றுபட்டால் இன்ஷா அல்லாஹ் வெற்றி நமதே!
لاَّ يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاء مِن دُوْنِ الْمُؤْمِنِينَ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللّهِ فِي شَيْءٍ إِلاَّ أَن تَتَّقُواْ مِنْهُمْ تُقَاةً وَيُحَذِّرُكُمُ اللّهُ نَفْسَهُ وَإِلَى اللّهِ الْمَصِيرُ
முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது. (3:28)
முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது. (3:28)
1 கருத்து:
இ.த.ஜ முடிவு சமுதாய நலன் கருதி எடுக்கப்பட்ட தீர்க்கமான முடிவு. அதை மனதார நாம் வரவேற்போம் ஆனால் எந்த உயிரோட்ட்மில்லாத 3.5% சதவித இட ஒதுக்கீடுக்காக திமுக கூட்டணியை ஆதரிப்போம் என்று கூறுவது ஏற்ககூடியதல்ல.
கருத்துரையிடுக