தமிழக அரசியல் தலைவர்களில் கருணாநிதியை 'அரசியல் சாணக்கியர்' என்று சொல்லுவர். ஆனால் சில விஷயங்களில் கருணாநிதியையும் மிஞ்சி அரசியல் ராஜதந்திரத்தோடு செயல்படுபவர் ஜெயலலிதா. அதுவும் குறிப்பாக வழக்கமாக பின்பற்றி வருகிறார். முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பாக, தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டபின் ' முஸ்லிம்கள் விஷயத்தில் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிப்பதையேபழைய' ஆணையத்தை புதுப்பித்து, இதோ! புண்ணியவதி ஆணையம் அமைத்துவிட்டார். இதோ முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்துவிட்டது என்ற தோற்றத்தை சில முஸ்லிம்தலைவர்கள் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் பரப்பி, அதன்மூலம் ஆட்சியை பிடிக்கமுடியாவிட்டாலும், முஸ்லிம்களின் வாக்குகளை அறுவடைசெய்து அதிகாரமிக்க எதிர்கட்சி தலைவராக அமர்ந்துவிட்டார்.
இதற்கு முன்,மூப்பனார் அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் உருவாக்கியவேளையில் அக்கட்சியின் கூட்டணியில் மத்திய சென்னையில் முஸ்லிம்லீக் சார்பாக பேராசிரியர் காதர்மைதீன் அவர்கள் போட்டியிடும் நிலையில், தனது கூட்டணியில் இருந்த அப்துல்லத்தீப் சாகிபை அதே மத்திய சென்னையில் நிறுத்தி முஸ்லிம்களின் வாக்குகளை பிரித்து முரசொலி மாறனை வெற்றிபெற செய்ய வழிகாட்டினார். இறுதியில் காதர்மைதீன் அவர்கள் வாபஸ் பெற்று லத்தீப் சாஹிப் மாறனுக்கு கடும்போட்டியை உருவாக்கி கவுரவமான தோல்வியை தழுவினார்.
இப்போது அதேபோன்று மத்திய சென்னையில் மனித நேயமக்கள் கட்சி சார்பாக சகோதரர் ஹைதர் அலி அவர்கள் போட்டியிடும் நிலையில், தனது கட்சி சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளரை மாற்றிவிட்டு அந்த இடத்தில் முஹம்மது அலிஜின்னா என்ற முஸ்லிமை களமிறக்கியுள்ளார். ஜெயலலிதா திடீரென்று ஒரு முஸ்லிமை வேட்பாளராக அறிவித்ததுக்கு காரணம் முஸ்லீம் சமுதாயத்தின்மீது கொண்ட பாசத்தினால் அல்ல.
1.மத்திய சென்னையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வாக்கு வங்கி முஸ்லிம்களுடையது. இரு தொகுதிகள் தருகிறோம், இரட்டைஇலையில் போட்டியிடுங்கள் என்று நாம் நம் கூட்டணிக்கு அழைத்தபோது அதை ஏற்கமறுத்து களம்கானும் ம.ம.க. வேட்பாளரை தோற்கடிக்கும் நோக்கில், முஸ்லீம் வாக்குகளை பிரிக்கும் வகையில் மற்றொரு முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.
2.முஸ்லிம்களை அண்ணா தி.மு.க. உள்ளிட்ட அனைத்து திராவிட மற்றும் கம்யூனிச கட்சிகளும் புறக்கணித்துள்ளதால் முஸ்லிம்கள் தங்கள் பலத்தை இந்த திராவிட கட்சிகளுக்கு உணர்த்தும் வகையில், 'இயக்கவெறியர்கள்' நீங்கலாக, ஏனைய அனைத்து முஸ்லிம்களும், முஸ்லீம் வேட்பாளர்களையே ஆதரிக்க முடிவெடுத்துள்ளநிலையில், தனது கட்சி சார்பாக ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட நிறுத்தப்படவில்லையானால் முஸ்லிம்கள் வாக்கு நமக்கு கிடைக்காது என்ற அச்சம்தான் ஜெயலலிதா ஒரு முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தியத்துக்கு காரணம்.
எனவே, முஸ்லீம் சமுதாயமே! நம்மை புறக்கணித்த கட்சிகளுக்கு நம்முடைய பலத்தை காண்பிக்கும் வகையில் கட்சி பாகுபாடின்றி, முஸ்லீம் வேட்பாளருக்கு வாக்களியுங்கள். ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் போட்டியிட்டால் அவர்களில் ஒருவர் தவிர்த்து மற்றவர் விலகிக்கொண்டு மற்றவரின் வெற்றிக்கு பாடுபடவேண்டும். ஒருவேளை விலக மறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் போட்டியிட்டால் அவர்களில் சிறந்தவர் யார் என பார்த்து அவர்களுக்கு வாக்களியுங்கள். இயன்றவரை அரசியல் கட்சி வேட்பாளர் அல்லாத, ம.ம.க. போன்ற முஸ்லீம் அமைப்பு வேட்பாளரை ஆதரிப்பது சிறந்தது. ஏனெனில், அரசியல்கட்சி வேட்பாளர் ஜெயித்து எம்.பியானாலும், அவரால் சுயமாக நமது சமுதாய பிரச்சினையை எடுத்து வைக்க முடியாது. அவர் சார்ந்த கட்சியின் கொறடா அனுமதிக்கவேண்டும். அதோடு அனுமதிக்கப்பட்ட விஷயத்தில்தான் பேசமுடியும். ஆனால், ம.ம.க. போன்ற சமுதாய கட்சியானால், சமுதாயத்திற்கு ஒரு பிரச்சினை எனில் எவருக்கும் அஞ்சாமல் துணிந்து குரலெழுப்ப முடியும்.
சமுதாயமே சிந்தித்து வாக்களி! சிதறி விடாதே!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக