புதன், 22 ஏப்ரல், 2009

புதிய அரசியலைக் கொண்டு வருவோம்...' - பேரா.டாக்டர்.ஜவாஹிருல்லாஹ்

புதிய அரசியலைக் கொண்டு வருவோம்...' - ஜவாஹிருல்லாஹ்!

ஏப்ரல் 21,2009

தி.மு.. கூட்டணியில் இருந்து விலகி தனித்துப்போட்டியிடுகிறது 'மனித நேய மக்கள் கட்சி' .மு.மு.-வின் அரசியல் பிரிவான ..-வின் நிலையை அறிய .மு.மு.. தலைவர் ஜவாஹிருல்லாஹ்வை சந்தித்தோம்.

'' தி.மு.. கூட்டணியில் உங்களுக்கு என்னதான் பிரச்னை?''

''தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அமைச்சர் மு..ஸ்டாலினிடம் ஆறு தொகுதிகளின் பட்டியலைக்கொடுத்து 'மூன்றை ஒதுக்கவேண்டும்' என்று கோரினோம். முதல்வர் கருணாநிதியை சந்தித்தபோதும் இதே கோரிக்கையைச் சொன்னோம். 'இதற்கு மேல் இறங்கி வரமுடியாதா?' என்று கலைஞர் கேட்க, 'ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம். அதுவும் தனி சின்னத்தில் நிற்கத்தான் விருப்பம்!' என்றோம். என்னென்ன தொகுதிகள் என்று பேச்சு வந்த நேரத்தில், 'மத்திய சென்னை கேட்கிறீர்கள்... தயாநிதியிடம்தான் கேட்க வேண்டும்' என்று சொன்னார். மற்ற கூட்டணிக்கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவான பிறகு அமைச்சர் ஆற்காட்டாரும் மு..ஸ்டாலினும் என்னைத்தொடர்பு கொண்டு 'ஒரு தொகுதி தருகிறோம். உடனே வாருங்கள்'என்றார்கள். நாங்கள் மறுத்துவிட்டோம்.

''தி.மு.. கூட்டணியில் இருந்து கொண்டே .தி.மு.-வுடன் பேச்சு வார்த்தை நடத்தியதுதான் தி.மு.. தரப்பை எரிச்சல் படுத்தியதாகப்பேச்சு இருக்கிறதே...''

''அப்படி எதுவுமில்லை. எங்களை கழற்றிவிட தி.மு.. முடிவு செய்திருந்த நிலையில், .தி.மு.. நண்பர்கள் சிலர் எங்களிடம், 'ராமநாதபுரம், மயிலாடுதுறை தொகுதிகளைத் தருவதாக' சொன்னார்கள். ஆனால் இரட்டை இலைச்சின்னத்தில் நிற்கவேண்டும் என்று நிபந்தனை போட்டார்கள். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை அதனால் அவர்களுடனும் கூட்டணி வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டோம்.''

''இதுகாலம் வரையில் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளுக்கு திராவிட கட்சிகள் ஒரு ஸீட் வழங்குவதும் இரட்டை இலை அல்லது உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதும்தானே வழக்கமாக இருக்கிறது?''

''இதுகாலம் வரையில் தி.மு.-வும் .தி.மு.-வும் முஸ்லிம்களை ஏமாற்றி ஆதாயம் பார்த்து வந்தன. இரண்டுமே முஸ்லிம்களின் முதுகில் சவாரி செய்து கொண்டிருந்தன. 1996 தேர்தலில் தொடங்கி இரண்டு தேர்தலைத் தவிர, மற்ற தேர்தல்களில் தி.மு.-வை .மு.மு.. ஆதரித்திருக்கிறது. ஒரு ஸீட் காலாசாரமே குழிதோண்டிப்புதைக்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. இரவல் சின்னத்தில் போட்டியிடும் நிலையிலும் நாங்கள் இல்லை. சிறுபான்மையின் மீது அக்கறை இருப்பதாகச்சொல்லி கொண்டு இரண்டு கட்சிகளுமே முஸ்லிம்களை ஏமாற்றிவருகின்றன. இப்போது .தி.மு.. சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிற வேட்பாளர் பட்டியலில் ஒருவர்கூட முஸ்லிம் கிடையாது. தி.மு.. கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கியிருக்கிறார்கள். உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்ப்பந்தித்திருக்கிறார்கள்.''

''இப்போது நீங்கள் தனித்து விடப்பட்டு விட்டீர்களே...?''

''பிப்ரவரில் கட்சியின் தொடக்க விழா தாம்பரத்தில் நடந்தபோது, அந்த மாநாட்டிலேயே ஆறு தொகுதிகளைக்குறிப்பிட்டு 'அதை நாங்கள் குறிவைத்திருக்கிறோம். இந்தத் தொகுதிகளைத்தந்தால் கூட்டணி' என்று அறிவித்தோம். தி.மு.-வில் ஸீட் கிடைக்கவில்லை என்பதற்காக நாங்கள் தனித்துவிடவில்லை...''

''சரத்குமார் கட்சி உட்பட சில கட்சிகளுடன் பேசிவருவதாக செய்திகள் வருகிறதே...?''

''மற்ற கட்சிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு புதிய அணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்வோம். அரசியலில் முஸ்லிம் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பவேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம். எங்கள் வேட்பாளர்கள் யாருமே சொந்தமாக பணம் செலவழிக்கமாட்டார்கள். கட்சிதான் செலவழிக்கும். தமிழகத்தில் புதிய அரசியலைக்கொண்டு வருவோம்.''

- ஜூனியர் விகடன் ( 19- 04- 2009)

கருத்துகள் இல்லை: