இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
சனி, 11 ஏப்ரல், 2009
தமிழகத்தில் தனித்துவிடப்பட்டுள்ள பாஜக.
ஏப் 10: நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி என்று முன்பு அறிவித்திருந்த நிலையில் அந்த அறிவிப்பு ஒப்பந்தமில்லா அறிவிப்பு என்பது இப்போது தெரியவந்துள்ளது. 10-04-2009 அன்று மாலை முரசு பத்திரிக்கையில் வெளிவந்த பாஜகவின் செய்தி அதை உறுதி செய்கிறது.
நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சிக்கு நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளது இதன் மூலம் தினத்தந்தி போன்ற ஊடக பலமுள்ள நாடார் சமூகத்தின் ஆதரவை மனிதநேய மக்கள் கட்சி பெற்றுள்ளதன் மூலம் நாடார் சமூகத்தின் ஆதரவு மதவாத பிஜேபிக்கு கிடைப்பதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது அதன் மூலம் பிஜேபி தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அதுபோல் தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் ஆதரவு உள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகமும் தனது நிலைபாட்டில் மதில் மேல் பூனையாக இருந்த நிலையில் அதன் ஆதரவையும் மனிதநேய மக்கள் கட்சி பெற்றிருப்பதன் மூலம் பஜகவிற்கு கிடைக்கவிருந்த புதிய தமிழகத்தின் ஆதரவும் விலக்கப்பட்டு இப்போது பாஜக தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் திங்கள் கிழமை பத்திரிக்கையளர்கள் சந்திப்பில் கூட்டணிகட்சி தலைவர்களுடன் மனிதநேய மக்கள் கட்சி வெளியிடும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக