திங்கள், 20 ஏப்ரல், 2009

2 வசனங்கள் நீக்கப்பட்ட குர்ஆன் வெளியீடு - தடுத்து நிறுத்தியது சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை

தவுஹீத் வாதிகள் எங்கே போனார்கள்…. பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த தவ்ஹீத் பிரச்சரம் இப்போது இல்லை..என்பதற்கு இது ஒரு சாட்சி… அண்ணனின் அடிமைகளே…சிந்திப்பீர்…சம்பவம் நடந்த இடத்திலிருந்து பக்கத்தில் உள்ள தவ்ஹீத் அமைப்புகளின அலுவலகங்கள்…இருந்து என்ன தவ்ஹீத் அமைப்புகள் எல்லாம் அரசியலில் தீவிரமாக உள்ளது இதன் மூலம் நிருபிக்க பட்டுள்ளது.




சென்னை ஏப்ரல் 19, இஸ்லாத்தின் எதிரிகளான இஸ்ரேலாலும், யூதர்களாலும், கிருத்துவர்களாலும் நிதி உதவி செய்யப்பட்டு முஸ்லிம்கள் மததியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நச்சுக் கருத்தக்களை விதைப்பதற்காக உறுவாக்க பட்ட அமைப்பான "அஹ்லுல் குர்ஆன்" என்ற அமைப்பின் தலைவன் ரசாது கலீபா என்பவன் தன்னைத்தானே இறுதி தூதர் என்றும் குர்ஆன் திறிக்கப்பட்டுள்ளது என்றும் கூறி குர்அனில் சில வசனங்களை நீக்கி அதை ஆங்கிலத்தில் வெளியிட்டான் பின்னர் அவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த அயோக்கியனின் அமைப்பான "அஹ்லுல் குர்ஆன்" அமைப்பினர் தமிழகத்திலும் உள்ளனர் அவர்களின் தலைமை அலுவலகம் சென்னை மின்ட் பகுதியில் உள்ளது. அவர்கள் நேற்று சென்னையில் ஒரு சுவரொட்டியை ஒட்டியிருந்தனர் அந்த சுவரொட்டியில் கூறப்பட்டிருந்ததாவது :


கடவுளின் பெயரால் அருளாளர் அன்பாளர் ஒரு சரித்திர குற்றம் அம்பலமாகிறுது !!உலகம் முழுவதும் பரபரப்பூட்டிய இறைத்தூது?
முழு வடிவில் தமிழகத்தில் முதல் முறையாக குரானில் சோக்கப்பட்ட இரு வசனங்கள் ஆதாரப்பூர்வமாக நீக்கப்பட்டு குரானை துர்ய்மை படுத்தி சததியத்தை எடுத்தரைத்ததால் இறை மறுப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மெய்ப்பிக்கும் தூதர் டாக்டர் ரசாது கலீபா பி.எச்.டி அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட குரானின் தமிழாக்கம்.
(குர்ஆன் இறுதி வேதம் வெளியீட்டு விழா)
19.4.2009 நேரம் மாலை 5.30 மி.
பாவாணர் கலையரங்கம்
அனைவரும் வருக ஆத்மார்த்தி பெறுக
அஹ்லுல் குரான்


இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் பொதுச்செயலாளர் திரு. மேலை நாசர் அவர்களை உடனடியாக தொடர்பு கொண்டனர். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையினர் உடனடி நடவடிக்கையில் இறங்கினர். திரு. மேலை நாசர், திரு. ஜமாலி ஆகியோர் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்டு இந்நிகழ்ச்சியை தடை செய்து உடனடியாக அந்த புத்தகங்களை கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரினர்.
அதன் பின்னர் சென்னையில் "அஹ்லுல் குர்ஆன்" அமைப்பின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் முஸ்லிம்களை திரட்டி சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை சார்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக காவல்துற "அஹ்லுல் குர்ஆன்" அமைப்பினரின் அலுவலகததில் அதிரடியாக புகுந்து அங்கு விநியோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த சரச்சைக்குறிய நூல்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: