இந்திய அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: வெளிநாடு வாழ் இந்தியர் அனைவர் மீதும் அவர்களது அனைத்துலக வருமானத்தில் 5% வருமான வரி விதிக்கப்படுகிறது.
புது தில்லி, ஏப்ரல் 14: வெளிநாடு வாழ் இந்தியர் அனைவருக்கும் அவர்களது அனைத்துலக வருமானத்தில் 5% வருமான வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் வரி செலுத்தப்பட்ட வருமானத்திற்கு இரட்டை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உங்களுக்கு வருமானம் வரும் ( இந்தியா முன்னதாகவே இரட்டை வரி ஒப்பந்தம் செய்துள்ள) நாட்டில் நீங்கள் செலுத்தும் வரி இந்த இரட்டை வரிச்சலுகையில் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வருடத்தில் 180 நாட்களுக்கு மேல் வெளிநாட்டில் வசிக்கும், இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருக்கும் அனைத்து இந்தியருக்கும் இந்த சட்டம் பொருந்தும். இவர்கள் அனைவரும் பணியாளர் விண்ணப்ப படிவத்தை வருமான சான்றிதலுடன் சமர்பித்தலும், வெளிநாட்டு வரி பதிதலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோப்பு பரிமாற்றம் மற்றும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுடன் இந்தியா தொடர்பு கொண்டு அந்நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இந்தியர்களின் வருமான விபரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் வரியை கொண்டு இந்தியாவை முன்னேற்றப்பாதையில் செலுத்துவதற்காக இந்த சட்டம் கட்டாய நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
இந்த சட்டம் மூலம் 2009-10 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 10 பில்லியன் (ஆயிரம் கோடி) இந்திய ரூபாய் வரி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள:
என்ற இணையதளத்தில் சென்று பார்வையிடுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக