நமது இந்திய நாட்டில் மேல்மட்டத்தில்ருந்து கீழ்மட்டம்வரை அனைத்து துறைகளிலும் லஞ்சம் தாண்டவமாடுவதை யாராலும் மறுக்கமுடியாது. ஒரூ குழந்தை பிறந்து அக்குழந்தைக்கு பிறப்பு சான்றிதல் வாங்கும்போது தொடங்கி, அதே குழந்தை வளர்ந்து, பின்பு இறக்கும்போது வாங்கும் இறப்பு சான்றுவரை 'சல்லி' கொடுத்தால்தான் வேலைநடக்கும் என்ற நிலை உள்ளது. லஞ்சத்தை வெறுக்கும் அதிகாரிகள் சிலர் இருந்தாலும், லஞ்சத்தை சுவாசிக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கைதான் அதிகம். இந்த லஞ்சத்தை ஒழிப்பதற்காக, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஒருபுறம் பாடுபட்டுக்கொண்டிருக்க மறுபுறம் லஞ்சம் அனைத்து மட்டத்திலும் தன் கிளை பரப்பி இருப்பதை யாரும் மறுக்கமுடியாது.
இந்நிலையில், பாஸ்போர்ட் பெற்றுத்தருவதற்காக லஞ்சம் வாங்கியதாக மறைந்த நம்சமுதாயத்தலைவர் அப்துஸ்ஸமது சாஹிப் அவர்களின் மகளார் சகோதரி. பாத்திமா முஸப்பர் அவர்களும் , இவருக்கு உதவியதாக பாஸ்போர்ட் அலுவலக பெண் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பாத்திமா முஸப்பர் அவர்கள் சிறைக்கு செல்வதற்குமுன் நீதிபதியின் விசாரணையின் போது, இரவு முழுவதும் என்னை தூங்கவிடாமல் விசாரித்தார்கள். நான் போட்டிருந்த பர்தாவை அகற்றுமாறு உத்தரவிட்டார்கள். எனது கணவர் முன்பு மட்டுமே பர்தாவை அகற்றும் எனக்கு மற்ற ஆண்கள் முன்னிலையில் அதை அகற்றியது மனதை மிகவும் பாதித்தது என்று கூறியதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது..
சகோதரி பாத்திமா முஸப்பர் கைது செய்யப்படுவதையோ, விசாரணைக்கு உட்படுத்தப்படுவதையோ, தவறிழைத்து இருந்தால் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதையோ யாரும் குறைகானமுடியாது. மனப்பூர்வமாக வரவேற்போம். ஆனால் விசாரணைக்கு பர்தாவை அகற்றவேண்டிய அவசியமென்ன? பாத்திமா முஸப்பர் சொல்வது உண்மையானால் சி.பி.ஐ.யின் இந்தசெயல் கண்டிக்கத்தக்கது. முஸ்லீம் பெண்களின் பர்தா விசயத்தில் இவ்வளவு கடுமை காட்டும் அதிகார வர்க்கம், விபச்சார வழக்கில் ஆஜராக வரும் நடிகைகள் பர்தா அணிந்து வந்தால்கண்டுகொள்வதில்லை. பர்தாவை அகற்றுமாறு சி.பி.ஐ. கூறியது உண்மையா என்பதை முஸ்லீம் சமுதாயம் விசாரிக்கவேண்டும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த சமுதாய அமைப்புகளும் அதிகார வர்க்கத்தின் இச்செயலை கண்டிக்க முன்வரவேண்டும்.
இதில் தாய்ச்சபை மவுனம் காப்பது புரியாத புதிராக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக