ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

பயோடேட்டா-மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள்

தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (மயிலாடுதுறை வேட்பாளர்)

பிறந்தது தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி. பள்ளி கல்வி முழுவதும் சென்னையில், புதுக்கல்லூரியில் பட்டப் படிப்பும், சென்னை பல்கலை கழகத்தில் எம்.பி.ஏ, எம்.பில் (இணையதள விளம்பரங்கள்) பி.ஹெச்.டி பட்டம் (இஸ்லாமிய வங்கியியல்)

30 ஆண்டு காலம் வாணியம்பாடி இஸ்லாமியப் பல்கலை கழகத்தில் பேராசிரியர் பணி.
மிகச் சிறந்தப் பேச்சாளர். எழுத்தாளர்.

தமுமுக ஆரம்பித்த பொழுது துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவர், பின்பு குணங்குடி அனிபா விலகலுக்கு பின்னர் இன்று வரை தமுமுகவின் தலைவர் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.



தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ((மத்திய சென்னை வேட்பாளர்)

பிறந்தது இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக ஆரம்பித்த காலத்தில் தலைமை கழகச் செயலாளராகப் பணியாற்றிவர். பின்னர் படிப்படியாக கழகத்தின் பொதுச் செயலாளராக உருவானார். படிப்பு 10. பொது வாழ்வில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்.

சலிமுல்லாஹ் கான் (இராமநாதபுரம் வேட்பாளர்)

1998 ஆம் ஆண்டில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் தமுமுகவின் தலைவர். இராமநாதபுரம் மாவட்ட முஸ்­ம்களால் பரவலாக அறிமுகம் ஆனவர். படிப்பு 12. பிறந்த ஊர் இராமநாதபுரம்.

கருத்துகள் இல்லை: