செவ்வாய், 7 ஏப்ரல், 2009

பாஜக தேர்தல் அறிக்கை: கங்கையை குடத்துக்குள் அள்ளும் முயற்சி!

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காணாமல் போகும் கட்சிகளில் பாஜகவும் ஒன்றாக இருக்கக் கூடும். ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் கூட்டணி கிடைக்காமல் தனித்து களத்தில் நிற்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்பது பாஜகவின் தற்போதைய சோகம். கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் 24 கட்சிகளை இணைத்து தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமைத்த பாஜக தற்போது 6 கட்சி கூட்டணியாக சுருங்கிப் போனது.

தமிழ்நாட்டில் பாஜக நிலைமை பரிதாபகர மாகிப் போனது. இறுதியாக கூட்டணிக்கு கிடைத்திருப்பது, சரத்குமாரும் ராதிகாவும். அதன் அலுவலக வளாகம் வெறிச்சோடிக் கிடந்ததை தினசரி ஒன்று படம்பிடித்துப் போட்டது. முஸ்லிம் கள் லி பாகிஸ்தான் லி பயங்கரவாதம் லி இந்தியாவுக்கு ஆபத்து போன்ற வழக்கமான அதன் வாதங்கள் தோற்றுப் போயுள்ளன. அத்வானி லி பைரோன்சிங் செகாவத் இடையே மூண்ட தலைமை போர், அருண்ஜெட்லிக்கும் லி ராஜ்நாத் சிங்குக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல், 'கருத்து முரணற்ற கட்டுக்கோப்பு' என்ற அதன் இமேஜை தவிடுபொடியாக்கின.


முப்பது கோடிக்கும் மேலான மக்கள் தினமும் மூன்று வேளைக்கும் உண்ண வழியின்றி இருக்கும் தேசத்தில், 'இந்தியா ஒளிர்கிறது' என்ற பெயரில் 2004ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பலகோடி ரூபாய்களை வாரியிறைத்தது. எனினும் இந்திய மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டினர்.


பாஜகவின் தற்போதைய தேர்தல் அறிக்கையை வாசிக்கும்போது பாஜகவில் அறிவுப்பஞ்சமா, ஆள் பஞ்சமா என்று ஓர் விவாதமே நடத்தலாம். நாட்டின் உண்மையான பிரச்சினையைக் கூட பாஜக வால் உணர்ந்து கொள்ள முடியவில்லை என்பதை அதன் தேர்தல் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.


48 பக்க அறிக்கையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதும் இல்லை. கிலோ 2 ரூபாய் மதிப்பில் மாதம் 35 கிலோ அரிசி வறுமைக் கோட் டிற்கு கீழேயுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என்று பாஜக கூறுகிறது. மலிவு விலை அரிசி ஒன்றும் புதிய திட்டம் இல்லை. தமிழ்நாடு, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இது ஏற்கெனவே சிறப்பாக உள்ளது. சில மாநிலங்களில் தேர்தல் வெற்றிக்கு இலவச, மலிவு விலை அரிசி ஒரு காரணமாக இருந்துள்ளது. அதன் தூண்டுதலாலேயே பாஜக வெற்றி என்ற இலக்கை குறிவைத்து அரிசி மூட்டையை தூக்கிக் கொண்டு தேர்தல் அரசியலில் குதித்திருக்கிறது. இதுவும் ஒருவகையில் வாக்கு வங்கியை குறிவைத்துள்ள திட்டம்.


இந்தியக் கிராமங்களுக்கு சாலை, மின்வசதி, பள்ளிக்கூடங்கள் அமைக்க, வெளிநாட்டு வங்கி களில் முடங்கியுள்ள 25 முதல் 75 லட்சம் கோடியி லான பணத்தை மீட்டுக்கொண்டு வருமாம். (அட அப்படியா?)


முறைசாரா தொழிலாளர்களுக்கு தனியாக தொழிலாளர் வங்கி ஏற்படுத்துதல், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சைக்கிள், அவர்கள் தொடர் கல்விக்கு நிதியுதவி. முஸ்லிம் மகளிர் கல்விக்கு உரிய நடவடிக்கை, பெண்கள் நலத்திட்டத்தில் பங்கு பெறும் பெண்களுக்கு 1500 ரூபாய் வைப்பு நிதி ஏற்படுத்துதல், பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான சட்டம் கொண்டு வருதல் ஆகியவற்றை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையில் எது புதுமை, எது தற்போதைய பிரச்சினைக்கான தீர்வு.


மேலும் வலிமையான தேசத்தை உருவாக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்கிறது பாஜக. அந்தப் பணி என்னென்ன? அதை செய்து முடிக்கும் இளைஞர்கள் தகுதி என்ன? என்ற விபரம் கூறப்படவில்லை. இதுவெல் லாம் சும்மா கொசுறாக சொருகி வைப்பது. அவ்வளவுதான். மற்றபடி தனது வழக்கமான வாக்குறுதிகளை அளிக்க பாஜக தவறவில்லை.


ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவது, பொடா சட்டத்தை இன்னும் கடினமாக்குவது, பொதுசிவில் சட்டம் கொண்டு வருவது (இவை அனைத்தும் முஸ்லிம் களுக்கு எதிரானவையாகும்) என குறிப்பிட்டுள்ளது.


பாஜக திருந்தவில்லை என்பதும், அதன் தலைமை களுக்கு முதிர்ச்சி இல்லை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. கடன்களை ரத்து செய்வது, சலுகைகளை கண்மூடித்தனமாக வாரி இறைப்பது என்று இந்திய மக்களை பெரும் பிச்சைக்காரர்களாகக் கருதவே தூண்டுகிறது இந்த அறிக்கை. இந்த அறிவிப்புகளால் இந்தியா ஒளிராது, அவமானத்தால் நெளியும்.


மொத்தத்தில் கங்கையை குடத்தில் அள்ள பிரயாசைப்படுகிறது பாஜகவின் உணர்ச்சி யிழந்த தேர்தல் அறிக்கை.

கருத்துகள் இல்லை: