| |
وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُوْلَـئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلاَّ خَآئِفِينَ لهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
இன்னும் அல்லாஹ்வுடைய பள்ளிகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, அவற்றை பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தைகையோர் அச்சமுடனின்றி பள்ளிவாயிகளில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் இழிவு உண்டு. மறுமையில் இவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (2:114)
சராசரி அறிவு படைத்தவனுக்கும் புரியும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது. ஆயினும் இவ்வசனம் தமிழக முஸ்லிம்களால் புரிந்துக் கொள்ளப்படவில்லை.
மனிதர்களில் செய்யும் கொடுமைகளில் மிகப்பெரும் கொடுமை அல்லாஹ்வுக்குச் சொந்தமான இல்லத்தில் அவனைத் துதிப்பதற்கு தடைவிதிப்பதாகும்.
அல்லாஹ்வின் பள்ளியில் எந்தச் நாட்டைச் சேர்ந்தவனும் அதில் தொழலாம். எந்த மொழி பேசுபவனும் தொழலாம், துதிக்கலாம். உலகம் முழுவதும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மட்டும்தான் அல்லாஹ்வின் பள்ளியில் தொழுவதற்கு தடை விதிக்கப்படும் கொடுமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இத்தகையகக் கொடுமைக்காரர்களுக்கு மேற்கண்ட வசனம் கடுமையான எச்சரிக்கை விடுகின்றது.
உலகிலேலே மிகவும் கொடுமைக்காரர்களாக அவர்கள் இறைவனால் கருதப்படுவார்கள்.
இப்படித் தடுப்பவர்கள் பள்ளிக்கு பயந்து செல்லும் நிலை உருவாகும்.
இந்த உலகத்திலேயே இழிவை அவர்கள் அடைவார்கள்.
மறுமையில் கடுமையான வேதனையைச் சந்திப்பார்கள்.
மறுமையின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இறைவனைப் பற்றி அச்சம் உள்ளவர்களுக்கும் இந்த எச்சரிக்கை மிகப் பெரிய விஷயமாகும்.
أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَى أَوْ أَمَرَ بِالتَّقْوَى أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّى أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَى كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ فَلْيَدْعُ نَادِيَه سَنَدْعُ الزَّبَانِيَةَ
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா? ஓர் அடியாரை அவர் தொழும்போது, நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்துக்கொண்டும் அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும் அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா? நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அப்படியல்ல; அவன் விலகிக் கொள்ளவில்லையானல், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை. ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும். நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம். (96: 9-18)
பள்ளிவாசலில் இறைவனைத் தொழுவதற்கு தடை விதிக்கும் கொடுமைக்காரர்களுக்கு எவ்வளவு கடுமையான எச்சரிக்கை இது!
நீன் உன் சபையினரை உனக்குத் தலையாட்டும் மூடர் கூட்டத்தை அழைத்து வா! நானும் எனது நரக காவலாளிகளை அழைக்கிறேன் என்ற எச்சரிக்கையை பொருட்படுத்தாத இவர்கள் தொழுபவனுக்குத் தடை விதிக்கிறார்களே! தடுப்பவன் குடிக்கிறான் என்பதற்காகவா?
சாரயக்கடை ஏலம் எடுத்திருக்கிறான் என்பதற்காகவா?
சினிமாக் கொட்டகை நடத்துகிறான் என்பதற்காகவா?
வட்டிக்கடை வைத்திருக்கிறான் என்பதற்காகவா?
ஊர்ப்பணத்தைச் சுரண்டி வாழ்கிறான் என்பதற்காகவா?
பள்ளிவாசல் சொத்துக்களை தன் பெயருக்குப் பட்டா போட்டுக் கொண்டான் என்பதற்காகவா?
நிச்சயமாக இல்லை.
இத்தகையக் கொடுமைக்காரர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்படுகின்றது.
யாரைத் தடுக்கிறார்கள்? இந்தக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவனை, வரதட்சனை வாங்கக்கூடாது என்று கூறுபவனை, வீன் விரயமும் ஆடம்பரமும் கூடாது என்பவனை, குர்ஆன் போதனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பவனை, நபியை மட்டும் முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பவனை, இறைவனைத் தவிர எவருக்கும் அஞ்சக்கூடாது என்பவனைத் தடுக்கிறார்கள். இப்போது மேலே உள்ள வசனத்தை மீண்டும் ஒருமுறை படியுங்கள்!
நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று என்று எழுதி வைக்கும் இவர்கள் அவர்களே எந்த மத்ஹபையும் பின்பற்றவில்லை. நான்கு மத்ஹபுகளில் எந்த மத்ஹபும் பள்ளிக்கு தொழ வருபவர்களைத் தடுக்குமாறு கூறவில்லை. தடுக்கக் கூடாது என்றே சொல்கின்றன.
சிலர் தவறான வழிகாட்டும்போது தொழுகையாளிகளைத் தடுக்கும்மாறு கூறும்போது அதற்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் நிற்கும் நிர்வாகிகளும், ஜமாஅத்தார்களும் இறைவனது எச்சரிக்கைக்கு உரியவர்களாகிறார்கள். மேலே கண்ட வசனங்கள் இத்தைகைய சமுதாயத்திற்கு பொருந்தக் கூடியதுதான். சமுதாயத்தின் துணையில்லாமல் இந்த முல்லாக்கள் எதையும் செய்ய முடியாது. தடுக்கத் தூண்டியவர்களும் தடுத்தவர்களும் அல்லாஹ்வுக்கு எதிராகப் போர் தொடுப்பவர்களே.
Next >
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக