புதன், 8 ஏப்ரல், 2009

தவ்ஹீது ஜமாத்

asalaamu அலைக்கும் [வரஹ்]


அறிமுகம்: பாம்பாட்டியாகிய நான் நடுத்தெருவைச் சார்ந்தவன். அரசியல் கூட்டம் முதல் ரஜினிபடம் ஆர்வம். வெற்றிகொண்டான் பேசினாலும் சரி பி.ஜெ பேசினாலும்சரி வெள்ளை வேட்டியுடன் ஆஜராகிவிடுவேன். இண்டர் நெட்டையும் விடவில்லை.


தமிழ்முஸ்லிம்டூப் (http://www.tamilmuslimtube.com/) இல் அனைத்து வகையான ஆடியோ வீடியோவும் கிடைப்பதால் அதையும் விட்டு வைக்கவில்லை. AWC,OMEGA,TAFRAG,TMB போன்ற ஈமெயில் குரூப்பிலிருந்தும் மார்க்கம் சம்பந்தமாகவும் பொதுவாகவும் மெயில்கள் வருகின்றன என்பதால் நான் கண்ட, கேட்ட விசயங்களை அவ்வப்போது இத்தளத்தில் எழுதலாம் என்று நினைக்கிறேன்.


என்னுடைய இம்மடலில் அறிஞர் பிஜெ மற்றும் தவ்ஹீது ஜமாத் குறித்துக் கேள்விகள் கேட்டிருப்பதால் எதிர்கோஷ்டி என்று அவசரப்பட்டுத் தப்புக் கணக்கு போட்டால் பின்னாடி வருத்தப்படுவீர்கள் சொல்லிப்புட்டேன் ஆமா! - பாம்பாட்டி B.A


=========================================================


பொய்,பித்தலாட்டம்,மோசடி, வாக்குருதி மீறல், மற்றும் இன்ணும் பிற அனைத்துப் பாவங்களுக்கும் தேர்தலில் போட்டியிடுவது காரணமாக இருப்பதால், மக்களின் மறுமை வெற்றியை பாழாக்கும் தேர்தலில் போட்டி என்ற இந்தபெரும் பாவத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்களின் பயன் கருதி இந்தஎச்சரிக்கை வெளியிடப்படுகிறது.


தயவு செய்து இயக்கவெறியை ஓரங்கட்டிவிட்டு நடுநிலையோடு சிந்திக்குமாறு மறுவெற்றியை விரும்பும் மக்களுக்கு வேண்டுகோளுடன் இந்த PDF இனைப்பை அனுப்புகிறேன்

அதிரை - அபூசுமையா
ஜித்தாவிலிருந்து.


==========================================================
மேற்கண்ட முன்னுரையுடன் அனுப்பப்பட்டிருந்த மின்மடலின் இணைப்பில் சொல்லப்ப்பட்ட விசயத்தின் சாராம்சம் என்னவென்றால்,


தமுமுக மற்றும் விடியல் இயக்கத்தினர் அரசியலில் போட்டியிடுவது தங்கள் சுயநலனுக்காகவே என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு ஆதாரமாக சில காரணங்களும் சொல்லப்பட்டிருந்தது. முற்றிலும் நிராகரிக்கப்படக்கூடிய வாதங்கள் அல்ல என்றபோதிலும் இறுதியாக "இன்றைக்கும் கும்பகோணம்,தஞ்சை மாநாட்டுக்குப் பின் தவ்ஹீது ஜமாத்தையும் தேர்தல் சாக்கடையில் தள்ளி ஆதாயம் அடைய சிலர் ஆசை வார்த்தைக் காட்டிக்கொண்டுதான் உள்ளனர். இதுவரை அவர்களின் வலையில் சிக்காமல் தனது தனித்தன்மையை தவ்ஹீது ஜமாஅத் காப்பாற்றி வருகிறது" என்று சொல்லப்பட்டிருந்தது நம்பும்படியாக இல்லை!


1) அண்ணன் பீஜே அவர்கள் தமுமுகவில் இருந்தபோது சென்னையில் நடந்த வாழ்வுரிமை மாநாட்டிற்கு ஜெயலலிதாவை சிறப்பு அழைப்பாளராக அழைத்தபோது அண்ணன் பீஜே அவர்கள் தமுமுக அமைப்பாளராக இருந்தார். அமைப்பாளர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி,அரசியல்வாதியை அதுவும் மோடியின் தோழியை சிறப்பு அழைப்பாளராக அழைத்தது ஏன்?


2) தமுமுகவில் இருந்தால் தவுஹீதுப் பிரச்சாரம் செய்யமுடியாது என்று சொல்லியே அதிலிருந்து வெளியேறினார். வெளியேறிய கையோடு தமிழ்நாடு தவுஹீது ஜமாத் என்ற பெயரில் அமைப்பை ஏற்படுத்தினார்கள்.அரசியல் ஆர்வம் ஒருபோதும் இல்லயென்றால் எதற்காகக் தனிக்கொடியை உருவாக்கினார்கள்?


3) மற்ற அரசியல் கட்சிகளைப் போன்றே ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் என்று செயல்பட்டது ஏன்?


4) 3.5% இட ஒதுக்கீட்டிற்கு முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் நடத்திய பேச்சுவார்த்தையால்தான் இடஒதுக்கீடு கிடைத்தது என்றது ஏன்? உண்மையிலேயே அதுவும் ஒரு காரணமாக இருந்தால் எப்படியோ முஸ்லிம்களுக்கு நன்மை விளைந்தால் சரி.பலன் அல்லாஹ்விடம் என்று அமைதியாக இருந்திருக்கலாமே.ஆனால் தமுமுகவை விட தங்களுக்கே இடஒதுக்கீட்டின் கிரடிட் கிடைக்க வேண்டும் என்று பத்திபத்தியாக எழுதியது ஏன்?


5) சில மார்க்க அறிஞர்களையும் சமுதாய ஆர்வலர்களையும் அழைத்துக் கொண்டு ஜெயலலிதாவைச் சந்திக்கச் சென்றது ஏன்?


6) சந்தித்தப் பிறகு இடஒதுக்கீடு விசயத்தில் ஜெயலலிதா சொன்னதைக் கிளிப்பிள்ளை போல் ஊர்ஊராகச் சென்று முழங்கியதும் பத்திரிக்கையில் எழுதியதும் ஏன்?


7) ஜெயலலிதாவுக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்தது ஏன்?


8) மோடியைவிட கலைஞர் மோசமானவர் என்று ஒருபக்கச் சார்பாகப் பேசியது ஏன்? மோடியளவு கருணாநிதி முஸ்லிம்களைப் படுகொலை செய்யாவிட்டாலும் அவ்வப்போது வஞ்சித்தும் ஏமாற்றியும் வந்திருக்கிறார். (தற்போதுகூட மமகவுக்கு ஒரு சீட்டுகூட ஒதுக்காமல் கழுத்தறுத்துள்ளார்).


9) முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டம் நடத்தியது யாருக்காக?


ஆகவே, மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மார்க்க அறிஞர் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களே! தவ்ஹீதுப்பிரச்சாரம் மட்டும்தான் உங்கள் குறிக்கோலென்றால் தனிக்கொடி, அரசியல் சார்பு போன்றவற்றை மூட்டை கட்டிவிட்டு அல்லது சாக்கடையைக் கிளறாது Mr.பரிசுத்தமாக இருங்கள். அவ்வப்போது அரசியலும் செய்வோம் என்றால் "தவ்ஹீது" காரணத்திற்காகவே தமுமுக இயக்கத்திலிருந்து வெளியேறினோம் என்று இனிமேல் சொல்லாமல் இருங்கள்.


பாசத்துடன்


பாம்பாட்டி B.A

கருத்துகள் இல்லை: