சனி, 4 ஏப்ரல், 2009

கேரளாவை உலுக்கியெடுக்கும் மதானி ஜுரம்


கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி மீண்டும் பரபரப்பாக செய்திகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறார்.


கேரள காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் லீக்கை மலைபோல் நம்பிக் கொண்டிருக் கிறது. ஆனால் முஸ்லிம் லீக் முன்பைப் போல் செல்வாக்குடன் இல்லை. பனாத் வாலா போன்ற பாரம்பரியம் மிக்க தேசியத் தலைவர் இல்லாததால் கிட்டத் தட்ட காலி பெருங்காய டப்பா என்று சொல்லும் நிலையிலேயே முஸ்லிம் லீக்கின் நிலை இருக்கிறது.


காங்கிரஸின் நிலை இவ்வாறிருக்க, முஸ்லிம் லீக்கின் முக்கியக் கோட்டையான பொன்னானியைக் கைப்பற்ற இடதுசாரிகள் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக மார்க்சிஸ்டுகளின் ஆர்வம் காங்கிரஸ்லிமுஸ்லிம் லீக் கூட்டணியினரை ஏகக் கடுப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பொன்னானி தொகுதியில் முன்னாள் கல்லூரி முதல்வரான ஹுசைன் ரண்டதானி என்னும் சுயேச்சை வேட்பாளரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மவ்லவி அப்துல் நாசர் மதானியும் ஆதரிக்கிறார்கள். நிலைமை தலைகீழ் ஆகும் போல் தெரிந்தது.


பொன்னானி தொகுதியில் முஸ்லிம் லீக் தோற்கும். காங்கிரஸ் கூட்டணி பலவீனம் அடையும். இவை அனைத்தை யும் விட மதானி அரசியல் சக்தி மிகுந்தவராக மாறிவிடுவார் என அஞ்சிய சங்பரிவார் கூடாரமும் தங்கள் பங்குக்கு மதானி மீது அவதூறுக் கணைகளையும் அள்ளி வீசின.


பாஜகவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு மதானிக்கு தீவிரவாத தொடர்பு இருப்பதாகக் கூறினார்.


முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீது அவதூறு சுமத்துவது பாஜகவின் சித்தாந்த முடிவாக இருக்கிறது. அதனால் பாஜக குறித்து யாரும் வியப்படைய மாட்டார்கள்.


ஆனால் காங்கிரசும் அவ்வாறே மதானி மீது அவதூறு சேற்றை அள்ளி வீசியது. இதைவிட வேதனையான விஷயம் என்னவெனில், முஸ்லிம் லீக்கும் கூட மதானி மீது தீவிரவாத அவதூற்றுச் சேற்றை அள்ளி வீசியது. இது கேரள மக்கள் மனதில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


இதனிடையே தன் மீது பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு மதானி சுடச்சுட பதில் அளித்துள்ளார்.


பொன்னானி தொகுதியில் மட்டுமல்ல, இடதுசாரிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கும் மதானி தனது மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவை தெரிவித் திருக்கிறார். வடகரா தொகுதியில் போட்டி யிடும் இடதுசாரி கூட்டணி கூட்டணி வேட்பாளர் சதி தேவியின் வேட்பு மனு தாக்கலின் போது மதானி செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார்.


நவ்ஷாத் என்பவரையும், மணி என்ற யூசுப் என்பவரையும் மதானியோடு தொடர்புபடுத்தி பேசப்பட்ட அவதூறுக்கு மதானி பதில் அளித்தபோது, நவ்ஷாத் என்பவரை தீவிரவாதி போல் சித்தரித்தனர்.


இதே நவ்ஷாத் மத்திய அமைச்சர் வயலார் ரவியுடனும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் குஞ்சாலிக் குட்டியுடனும் சேர்ந்து இருப் பதைப் போன்று புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டார்.


இவர்களோடு இருக்கும் போது ஒன்றும் சொல்லாதவர்கள் தன்னுடனும் இடதுசாரிகளுடனும் சேர்ந்தாற் போன்ற ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு எங்களை மட்டும் தீவிரவாத முத்திரைக் குத்துவதா? என ஆவேமாக பதிலடி கொடுத்தார்.


மணி என்ற யூசுப் என்பவரையும் தன்னோடு தொடர்புபடுத்தி அவதூறு சுமத்தப்பட்டது. மணி என்ற யூசுப் கோவை சிறையில் மதானி இருந்தபோது அவரோடு கோவை சிறையில் இருந் தவர். தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகனான மணி, இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக சிறைவாசக் காலத்தில் ஏற்றுக் கொண்டவர். இவர் மிகவும் ஏழையாக இருந்ததாலும், கொச்சியில் உள்ள தனது வீட்டில் தங்கிக் கொள்ளுமாறு மதானி கூறியிருக்கிறார். அங்கு தங்கிய மணி என்ற யூசுப் சிறிது காலத்தில் வெளியேறினார் என்றும் கூறிய மதானி தன் மனைவி மீது கூறப்படும் குற்றச்சாட்டையும் மறுத்தார். தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை மதானி ஆதரவாளர்கள் தீ வைத்ததாகவும், அது மதானியின் மனைவி சூஃபியாவின் கட்டளைப் படியே நடந்ததாகவும் குற்றம்சாட்டி அவதூறு சுமத்தப்பட்டது. ஆனால் பேருந்து எரிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மஜீத் என்பவரும் அவரது சகோதரரும் செய்தியாளர்கள் கூட்டத் தைக் கூட்டி உண்மையை உடைத் துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் தங்க ளைக் கடுமையாகத் தாக்கியதால் மதானி மனைவியை பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டியதாக அவர்கள் தெரிவித் துள்ளனர்.


இவை எல்லாவற்றையும் வைத்து விளாசிய மதானி, உள்துறை அமைச் சரிடம் நேரடியாக கோரிக்கை விடுத்தார். ''இறைவனின் மீது ஆணையாக... தனக்கு எந்தவித தீவிரவாதத் தொடர்பும் கிடை யாது. தன்னை சிறையில் வைத்தால்தான் நாட்டில் அமைதியான தேர்தல் நடத்த வேண்டுமெனில், தான் சிறை செல்லத் தயார்'' என்றும் மதானி கூறினார்.

கருத்துகள் இல்லை: