இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
புதன், 29 ஏப்ரல், 2009
சாதிப்பார் சலிமுல்லாஹ் கான்
இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி முஸ்லிகள் அதிகமாக வாழக் கூடிய தொகுதிகளில் ஒன்று. மொத்த வாக்காளர் களில் 20 சதவிகிதம் முஸ்லிம்கள் வாழக்கூடிய இத்தொகுதிகயில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியிலும் ஹஸன் அலி எனும் முஸ்லிம் ஒருவரே சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் சலிமுல்லாஹ் கான் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவராக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சலிமுல்லாஹ் கான் தொகுதியில் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். கல்வி உதவிகள், ஆம்புலன்ஸ் சேவை, இரத்ததானம் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சேவைகளுக்கு பின்புலமாக இருந்து முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களிடமும் நன்கு அறிமுகமானவர். சலிமுல்லாஹ்கான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே இராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க, ம.ம.க தொண்டர்கள் உற்சாகத்துடன் பிரச்சார களத்தில் இறங்கி விட்டனர். ராமநாதபுரம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர் அணிகளைப் பொறுத்தவரை தொகுதியில் 30 சதவிகிதம் இருக்கும் முக்குலத்தோர் களின் வாக்குகளை நம்பி திமுக சார்பில் நடிகர் ரித்திஷ், அதிமுக சார்பில் சத்திய மூர்த்தியும், பாஜக சார்பில் திருநாவுக்கர சரும் களமிறங்கி உள்ளனர். இதனால் முக்குலதோர்களின் வாக்கு சிதற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தே.தி.மு.க சார்பில் சிங்கை ஜின்னா என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த முறை கடலாடியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிட்டு தோல்வி யடைந்தவர். மற்றபடி சமுதாய மக்களிடமோ தொகுதியிலோ பெரிய அளவு அறிமுகம் இல்லாதவர்.
திமுக வேட்பாளர் ரித்திஷ் பணபலம் உடையவராக இருந்தாலும் சீட்டு கிடைக்காத விரக்தியிலும், ரித்திஷின் வளர்ச்சியிலும் பொறாமை கொண்ட திமுகவினரே ''உள்குத்து'' வேலைகளில் இறங்கிவிட்டதால் ரித்திஷ் கடும் மன வெறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. பசும்பொன்னில் நடைபெற்ற கோஷ்டி மோதல் வழக்கில் தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருவதாலும் அவரது இமேஜும் சரிந்துள்ளது. பிரச்சாரமும் தொய்ந்துள்ளது.
அதிமுக சார்பில் சத்திய மூர்த்தி ஒரு பக்கம் பிரச்சார வேகத்தை கூட்டினாலும் ஊழல் கறை படிந்தவர் என்பதால் முக்குலத்து மக்களிடம் கூட அதிருப்தி நிலவுகிறது. மேலும், பா.ஜ.க சார்பில் களமிறங்கியுள்ள திருநாவுக்கரசரும் முக்குலத்தோரையே நம்பி இறங்கியுள்ள தால் முக்குலத்தோர் வாக்கு வங்கி பங்கு போடப்படுவது தவிர்க்க முடியாது என்றே கருதப் படுகிறது.
மேலும் பாஜகவின் திருநாவுக்கரசருக்கு அறந்தாங்கி தொகுதியில் மட்டுமே சிறிதளவு செல்வாக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 2006 சட்டமன்ற தேர்தல் அறந்தாங்கியில் பாஜக பெற்ற வாக்கு 14,713. மொத்தமாக அதே சமயம் ஒட்டு மொத்தமாக இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி களில் பாஜக பெற்ற மொத்த ஓட்டுகளே 27,659 தான். இந்த திருநாவுக்கரசர்தான் வெற்றி பெற்று விடுவார் என்று சில முஸ்லிம் லட்டர் பேடுகள் பூச்சாண்டி காட்டி முஸ்லிம்களை திமுகவுக்கு ஆதரவாகவும், மமகவுக்கு எதிராகவும் தூண்டி வருகின்றன. பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்துள்ள சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமாருக்கு இராமநாதபுரம் நாடார் மக்களிடையே பெரிய செல்வாக்கு ஏதும் இல்லை. அதனால் துரோகிகளின் பிரச்சாரத்தை நம்பாமல் முஸ்லிம் சமுதாயம் ஒட்டு மொத்த வாக்கையும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கே நிச்சயம் அளிக்கும்.
மேலும் முக்குலத்தோர், தத், முஸ்லிம் என்ற வரிசையில் தொகுதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தத் மக்கள் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல தலித் அமைப்புகள், புதிய தமிழகம் ஆகியவை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாஹ் கானுக்கு ஆதரவு கேட்டு களத்தில் இறங்கியுள்ளனர். கூடவே மீனவ அமைப்புகளும், கிறித்தவ அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம் தேர்தல் களத்தில் முன்னணியில் நிற்கிறது.
தற்போது அதிமுகவின் சத்திய மூர்த்திக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சலிமுல்லாஹ்கானுக்கும் இடையே தான் பலத்த போட்டி நடந்து வருகிறது. எனினும் தன்மானத்தை மீட்டெடுக்க வேண்டும். துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மனிதநேய மக்கள் கட்சியினர் சலிப்பில்லா மல் ஆற்றும் களப்பணியால் வெகுமக்கள் ஆதரவோடு சலிமுல்லாஹ் கான் வெற்றிக் கொடி ஏற்றுவது நிச்சயம்.
தொகுப்பு: இப்பி பக்கீர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக