ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆறுமாதங்களுக்குள் அந்தர் பல்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்குத் தார்மீக ஆதரவைத் தெரிவித்துள்ளது. சென்ற அக்டோபர்-25,2008 அன்று ததஜ சார்பில் வெளியான பத்திரிக்கை அறிக்கையில் கீழ்கண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.


இந்த அறிக்கையை கோவையில் நடந்த ததஜ செயற்குழுவில் விவாதித்தார்களா?

அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதுபோல் வக்ப் வாரிய நிலம் இன்னும் ஆக்கிரமிப்பில்தான் உள்ளதா? அல்லது திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டதா?

வழக்கமாக ததஜவின் அறிக்கைகளில் கையொப்பமிடும் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் கையெழுத்து இந்த அறிக்கையில் இல்லையே?ஏதேனும் நீண்டகாலக் காரணங்கள் இருக்குமா? அல்லது பி.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள் இவ்வறிக்கை வெளியானபோது உள்ளூரில் இல்லையா?

ஆறுமாதங்களுக்குள் அந்தர் பல்டி அடிக்குமளவுக்கு அப்படி என்னதான் நடந்தது?

ததஜ சகோதரர்கள் தயவு செய்து தார்மீகப் பொருப்பேற்று பதில் சொல்வார்களா?

இப்படிக்கு,
இளிச்சவாயன்

thanks to : இளிச்சவாயன்

கருத்துகள் இல்லை: