தெஹ்ரான்:ஈரானை தனிமைப்படுத்த எந்த சக்தியாலும் முடியாது என்று ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் கூறியுள்ளார்.
சுய கெளரவமும் சர்வதேச உறவுகளை பேண விரும்பும் தேசம் என்ற நிலையில் ஈரானை புறக்கணிக்கவோ தனிமைப்படுத்தவோ எவராலும் முடியாது.
அணு ஆயுத தடுப்பு சட்டம் தொடர்பாக ஈரானுக்கெதிராக அணு ஆயுத கட்டுப்பாட்டுகழகம் வாக்களித்ததைத்தொடர்ந்து பொருளாதார தடை விதிக்கப்படக்கூடிய சூழலில்தான் ஈரான் அதிபர் சானல் ஒன் என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
உலகமயாமாக்கல் காலக்கட்டத்தில் தனிமைப்படுத்தல் என்ற வார்த்தைக்கு மதிப்பில்லை. அவ்வாறு தனிமைப்படுத்தினால் அதன் பின்னணியிலிருப்பது திமிரும் அறியாமையுமாகும். மத்திய ஆசியா இல்லாத உலக கூட்டமைப்பு என்பது பூர்த்தியாகாத ஒன்று. பொருளாதார தடைகளை தாண்டிய பாரம்பரியம்தான் எங்களுடையது. இவ்வாறு நிஜாத் கூறினார்.
இதற்கிடையே ஈரானுக்கு பொருளாதார தடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக