புதுடெல்லி:சமூக துவேசமுடைய நாடுகளின் பட்டியலில் இந்தியா பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளன.
வாஷிங்டனில் செயல்படும் Pew research centre நடத்திய சர்வேயில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. "சர்வதேச மத நம்பிக்கைக்கான கட்டுப்பாடுகள்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில்தான் அந்நிய மதத்தவர்களுடனான துவேசம் வலுவடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் ஈராக் முதலிடத்தை பெறுகிறது. உலகிலேயே புத்திஜீவிகளால் நடத்தப்படும் ஆய்வு நிறுவனம் என்ற பெயரைப்பெற்றது பியூ ரிசர்ச் செண்டர். மதங்களுக்கெதிரான அரசுக்கட்டுப்பாடுகள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இவ்விஷயத்தில் கியூபா, துனீசியா, இஸ்ரேல், சோமாலியா ஆகியநாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த ஆய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டது. உலகின் மக்கள்தொகையில் 99.5 மக்களும் இவ்வாய்வில் உட்படுத்தப்பட்டதாக இந்நிறுவனம் கூறுகிறது.
அரசு, சமூக தளங்களிலுள்ள சில கட்டுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு வினாக்களை தயாரித்து அதற்கு விடையை கண்டறிந்துதான் இந்நிறுவனம் ஆய்வைமேற்க்கொண்டது.
U.S. State department, U.S. Commission on international freedom, The council of europian union, The internaional crisis group, humanrights watch, Amnesty international, Hudson institute, U.N rapporteur on freedom of religion or belief ஆகிய நிறுவனங்களின் அறிக்கைகளும் இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாய்வில் முக்கிய காரணிகளாக மதநம்பிக்கைக்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் தனிமனிதர், சமூகம், அரசு, சட்டம், அமைப்புகள் ஆகியன எடுத்துக்கொள்ளப்பட்டன. அரசு மதக்கட்டுப்பாட்டில் சீனாவும், வியட்நாமும் முன்னணியில் உள்ளது. ஆனால் மததுவேசத்தில் இந்தியா சீனாவை விட முன்னணியில் உள்ளது.
பங்களாதேஷ், நைஜீரியா ஆகிய நாடுகளில் மதத்துவேசம் காணப்பட்டாலும் அரசுக்கட்டுப்பாடு குறைவாகவே உள்ளது. பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் அனைத்துவிதமான மதத்துவேசங்களும் காணப்படவில்லையென இவ்வாய்வு கூறுகிறது.
அரசின் மதக்கட்டுப்பாடு குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 40 இடங்களில் கூட இந்தியா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, இலங்கை, எத்தியோப்பியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை சமூகம் ஒன்று ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டுமென்றும் தங்களுடைய மதஸ்தலங்களை பாதுகாப்பதற்கும் கோரிக்கை விடுகின்றனர். இந்தியாவில் ஹிந்துத்துவா வாதிகள் ஒரு ஹிந்து தேசத்தை உருவாக்கவேண்டுமென்பதில் உறுதியாக உள்ளனர்.
இஸ்ரேலில் பாதுகாப்பின் பெயரால் பிற மதத்தவர்களுக்கு அவர்களுடைய வணக்கஸ்தலங்களுக்கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
சமூகத்துவேசம் இல்லாத நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகமும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா சமூக துவேசமுடைய நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அரசு கட்டுப்பாடு அறவே இல்லாத நாடுகளாக நியூசிலாந்து, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, இத்தாலி, தென் கொரியா, யு.எஸ், ஆஸ்திரேலியா ஆகியன உள்ளன.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக