தகுதி வாய்ந்த முஸ்லிம்கள் பிரதமராகலாமாம்.அலிகர் முஸ்லிம் பல்கலை கழக மாணவர் ஒருவர் இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இஸ்லாமியர் ஒருவர் பிரதமர் ஆக முடியவில்லையே. ஒரு இஸ்லாமியர் பிரதமராக இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த ராகுல், இந்தியாவில் பிரதமராவதற்கு மதமோ, ஜாதியோ ஒரு பொருட்டே அல்ல. இந்த விஷயத்தில் மதம், இனம் என்ற பேச்சுக்கே இடமில்லை.ஒருவரது தகுதிதான் முக்கியம். இன்று மன்மோகன் சிங் பிரதமராக இருக்கிறார் என்றால் அவர் சீக்கியர் என்பதற்காக அல்ல. அவர் மிகச் சிறந்த தகுதியும், திறமையும் கொண்டவர் என்பதால் தான்.
அதே போல முழுமையாக தகுதியுள்ள ஒரு இஸ்லாமியரும் இந்தியாவில் நிச்சயம் பிரதமராக முடியும். அப்படியே இஸ்லாமியர் ஒருவர் பிரதமரானாலும் அவர் இஸ்லாமியர் என்பதற்காக அல்ல, ஒரு தகுதி வாய்ந்த நபர் என்பதால் தான் பிரதமராகியிருப்பார்.சீக்கியர்கள் நமது மக்கள் தொகையில் மிகமிகக் குறைவு தான். தங்கள் இனத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வருவார் என்று அவர்கள் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
அது போல இஸ்லாமியர்களிலும் தேசிய அளவில் நிறைய தலைவர்கள் உருவாக வேண்டும். இஸ்லாமிய இளைஞர்கள் அரசியலில் அதிக அளவில் ஈடுபட்ட வேண்டும். அப்படி வந்தால் தான் உயர் பதவிகளை எட்ட முடியும்.ஆனால், துரதிஷ்டவசமாக தேசிய அளவில் மிகக் குறைவான இஸ்லாமிய இளைஞர்கள்தான் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது 25 இளம் முஸ்லீம்களாவது தேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டிருக்கிறேன்.
என திருவாய் மலர்ந்திருக்கிறார் ராகுல். காங்கிரசில் தகுதி வாய்ந்த முஸ்லிம்கள் யாருமே இல்லையா பிரதமராக.முதலில் இவருக்கு என்ன தகுதி இருக்கிறது காங்கிரசின் பொது செயலாளராக. எத்தனை முறை கட்சிக்காக சிறை சென்று இருக்கிறார்.எத்தனை முறை போராட்டங்களுக்கு தலைமை வகித்து இருப்பார்.பாவம் இந்திரா தவிர நேரு குடும்பத்தில் உள்ள அனைவருமே எந்த தகுதியும் இல்லாமல் வெறும் வாரிசுரிமை அடிப்படையில் காங்கிரசின் பொறுப்புகளுக்கும் அரசு பொறுப்புகளுக்கும் வந்தவர்கள்தான்.இந்த தகுதி வாய்ந்தவர்கள் முஸ்லிம்களின் தகுதிகள்பற்றி பேசுகிறார்கள்.காங்கிரசை தூக்கி நிறுத்திய அபுல் அபுல்கலாம் ஆசாத் பற்றி தெரியுமா ராகுலுக்கு,காந்தி நேருக்கு அடுத்து அவர்தானே அன்றைய காங்கிரசின் தூணாக நின்றவர்,அவர் இல்லாமல் காந்தி எந்த முடிவையும் எடுத்தது இல்லையே.பாவம் கல்வி அமைச்சர் என்ற ஒரு பொறுப்பை கொடுத்து அவரை ஓரம் கட்டி விட்டார்கள்.காங்கிரசின் மூன்றாவது தேசிய தலைவர் பத்ருதீன் தயாப்ஜி (1844-1906) பற்றி தெரியுமா ராகுலுக்கு,
இவரது கொள்ளு தாத்தாவுக்கெல்லாம் முந்தியவர் ஆயிற்றே அவர்.இவரது கொள்ளு தாத்தா மோதி லால் நேருவுக்கு முன் காங்கிரசின் தலைவராக இருந்த இமாம் ஹசன் பற்றி தெரியுமா .அவ்வளவு ஏன் இந்தியா விடுதலை அடைந்த போது அகில இந்திய காங்கிரசின் தலைவராக யார் இருந்தது.அபுல் கலாம் ஆசாத் தானே (1940-46).பாவம் முஸ்லிம்களுக்கு வாரிசுஅரசியல் தெரியாததால் இன்றைக்கு வெள்ளை காரிகளோடு ஆட்டம் போட்டு விட்டு இப்போதுதான் அரசியலுக்கு வந்த ஒரு கத்துக்குட்டி முஸ்லிம்களின் தகுதி பற்றி பேசக்கூடிய ஒரு நிலை வந்திருக்கிறது.சோனியா காந்தி எந்த தகுதி அடிப்படையில் இன்றைக்கு காங்கிரசின் தலைவராக இருக்கிறார்.இந்த கேள்விக்கு சொரணையுள்ள காங்கிரஸ் காரன் யாராவது பதில் சொல்ல முடியுமா.
ஹக்கீம் அஜ்மல் கான்,மௌலானா சயானி,அன்சாரி,மௌலானா முஹம்மது அலி என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக முஸ்லிம்கள் இருந்த வரலாறு தெரியுமா ராகுலுக்கும் சோனியாவுக்கும்.காந்திக்கு முன்னால் இருந்தே முஸ்லிம்கள் காங்கிரசை வலுப்படுத்தி தலைமை தாங்கிய வரலாறு ராகுலுக்கு எங்கே தெரிய போகிறது.
பழையகாலத்தை விடுங்கள்.காங்கிரசில் இப்போது தகுதி வாய்ந்த தலைவர்கள் இல்லையா. மன்மோகன் மாதிரி தலையாட்டும் தலைவர்கள் இல்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.அஹ்மத் பட்டேல் (நம்ம கருணாநிதி முன்னால் கால் மேல் கால் போட்டு நக்கலாக உட்கார்ந்தவர்),குலாம் நபி ஆசாத் என தகுதி வாய்ந்தவர்கள் எவ்வளோ பேர் இருக்கிறார்கள்.இன்றைக்கும் காங்கிரசுக்கு ஒரு பிரச்னை என்றால் இவர்கள்தானே முன்னால் வந்து நிற்கிறார்கள்.இவர்களின் தகுதி பற்றி தெரியாதா ராகுலுக்கு, இனிமேல்தான் 25 பேரை உருவாக்க போகிறாராம்.அரசியல் கற்று தரப்போகிறாராம்.பிரதமராக்க போறாராம்.முஸ்லிம்களுக்கு அரசியல் இவர் கற்று தருகிறாராம்.வாங்க உங்களிடம் மானத்தை விக்க சில சொரண கெட்ட முஸ்லிம்கள் சிக்காமலா போய்டுவாங்க.
பழையகாலத்தை விடுங்கள்.காங்கிரசில் இப்போது தகுதி வாய்ந்த தலைவர்கள் இல்லையா. மன்மோகன் மாதிரி தலையாட்டும் தலைவர்கள் இல்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.அஹ்மத் பட்டேல் (நம்ம கருணாநிதி முன்னால் கால் மேல் கால் போட்டு நக்கலாக உட்கார்ந்தவர்),குலாம் நபி ஆசாத் என தகுதி வாய்ந்தவர்கள் எவ்வளோ பேர் இருக்கிறார்கள்.இன்றைக்கும் காங்கிரசுக்கு ஒரு பிரச்னை என்றால் இவர்கள்தானே முன்னால் வந்து நிற்கிறார்கள்.இவர்களின் தகுதி பற்றி தெரியாதா ராகுலுக்கு, இனிமேல்தான் 25 பேரை உருவாக்க போகிறாராம்.அரசியல் கற்று தரப்போகிறாராம்.பிரதமராக்க போறாராம்.முஸ்லிம்களுக்கு அரசியல் இவர் கற்று தருகிறாராம்.வாங்க உங்களிடம் மானத்தை விக்க சில சொரண கெட்ட முஸ்லிம்கள் சிக்காமலா போய்டுவாங்க.
முதலில் 17 ஆண்டுகளாக இடிக்கப்பட்டு வழிபாடு உரிமை மறுக்கப்பட்டுள்ள பாபரி பள்ளி வாசலை 100 நாட்களுக்குள் திரும்ப கட்டி தருவதாக சொன்னிங்களே அத செய்ங்க..பிரதமராவது புடலங்காயாவது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக