இலங்கையின் கிழக்குப் பகுதியில் புதிதாக உருவாக்கபட்டுள்ள மக்கள் விடுதலை இராணுவம் என்ற அமைப்பிற்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
பாலஸ்தீன விடுதலை இயக்கம் ( PLA இப்போது -West Bank- வெஸ்ட் பேங்க்கிள் அதிகாரத்தில் உள்ள அமைப்பு ) எவ்வித தொடர்புகளும் கிடையாது என இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் டாக்டர். அன்வர் அல் அக்ஹா தெரிவித்துள்ளார். அவ்வமைப்பிற்கு பாலஸ்தீன விடுதலை இயக்கதுடன் தொடர்பு இருப்பதாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ள பாலஸ்தீன் அரசாங்கம் இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்க அந்நாட்டு அரசாங்கத்திற்கு போதுமான உதவிகளைச் செய்துள்ளதாகவும், தொடர்ந்தும் தமது உதவியை புரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக