புதன், 9 டிசம்பர், 2009

டிசம்பர் 6 : நாடெங்கும் எழுச்சி போர்!

இறைவனின் ஆலயமாம் பாபரி மஸ்ஜிதை இடித்துத் தரைமட்டமாக்கி இந்திய முஸ்லிம்களை வேதனைக்குள்ளாக்கி ஒட்டுமொத்த நாட்டையே அவமானச் சேற்றில் மூழ்கடித்த அயோக்கியத்தனத்தைக் கண்டித்து டிசம்பர்லி6, 2009 அன்று இந்தியா வெங்கும் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றன.
முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை மீட்க இந்தியத் திருநாட்டின் தன்மானத்தை யும் மீட்க தமிழகம் அறப்போராட்டங்களை ஜனநாயக வழியில் தடையை மீறிய போராட்டங்களாயினும் சரி, பேரணிகளாயினும் சரி, சிறைக்கொட்டடிகளை நிரப்பும் தயங்காத மக்கள் பேரியக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் இவ்வாண்டும் எழுச்சியுடன் போராட்டக்களம் கண்டது.

பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டங்களின் தொடக்க காலங்களில் த.மு.மு.க. மட்டுமே தன்னந்தனியாக போராட்டங்களை நடத்தியது.

எழுச்சியுடன் கூடும் இளைஞர் பட்டாளத்தையும், சீறித்திமிறும் மாணவர் படை யையும், தன்னெழுச்சியுடன் திரளும் தாய்மார்களையும், பெரியோர்களையும் உள்ள டக்கிய போராட்டங்களை தொடுத்த த.மு.மு.க. தமிழக இயக்கங்களுக்கு முன்னோடி யாக விளங்கி வந்தது.

குறிப்பாக டிசம்பர்லி6 போராட்டங்களை த.மு.மு.க.வைப் போன்றே சமுதாயத்தின் பல அமைப்புகளும் போராட்டக்களம் கண்டன.

தமிழகத்திற்கு மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் செயல்படும் சமுதாய இயக் கங்களுக்கு முன்னோடியாக தமுமுக திகழ்ந்து வருவதை இந்த நாடு கண்டது.

எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருடம் அகில இந்திய அளவில் பாப்ரி மஸ்ஜித் மீட்புப் போராட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழகத்தில் இந்த ஆண்டு தமுமுக, இந்திய தவ்ஹீத் ஜமாத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை, தேசிய உலமாக்கள் கவுன்சில், தேசிய லீக் கட்சி, தமிழ் மாநில முஸ்ம் லீக், இஸ்லாமிய ஜனநாயக கட்சி உட்பட ஏராளமான அமைப்புகள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தின. பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை கண்டன பொதுக்கூட்டம், கருத்தரங்குகளை நடத்தின.

இடித்தவர்களை தூக்கில் போடு...

பாபரி மஸ்ஜித் தகர்ப்புக் குற்றவாளிகளை தூக்கில்போட வேண்டும் என முஸ்லிம் ஐக்கிய முன்னணி வேண்டுகோள் விடுத்தது. பீகாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் ஐக்கிய முன்னணி பீகார் மாநிலம் பாகல்பூரில் 1989லில் நிகழ்ந்த முஸ்லிம்களின் படுகொலைகளுக்கு எதிராகப் போராடி சட்டப்பூர்வமாக வெற்றி பெற்ற இயக்கம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பாட்னாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் தலைவர் அபூகெய்சர் பேசினார். மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்புடைய அஜ்மல் அமீர் கசாபை தூக்கில் போட வேண்டும். அதைப் போன்று பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளிகளையும் தூக்கில் போட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

லிபரான் ஆணையத்தால் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் பாபரி மஸ்ஜிதை மட்டும் தகர்க்கவில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் மீதே தாக்குதல் நடத்தி யிருக்கிறார்கள் என்று தெரிவித்த அபுகெய்சர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டித்தருவோம் என நரசிம்மராவ் செய்தியாளர்களின் கூட்டத்தில் வாக்குறுதி அளித்தார்.

அவர் அளித்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்; தாமதித்தால் அனைத்து மதச்சார்ப்பற்ற சக்திகளையும் இணைத்து நாடாளுமன்றத்தின் பெரும் போராட்டம் நடத்துவோம் என்றும் முஸ்லிம் ஐக்கிய முன்னணி தெரிவித்தது. மதச்சார்பற்ற கொள்கையின் சாம்பியன்களாக தங்களை நினைத்துக் கொள்ளும் லாலுவும், பாஸ்வானும் நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் மட்டும் பாபரி பிரச்சினை குறித்து பேசுகின்றனர். மதச்சார்ப்பற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கல்யாண்சிங்குடன் கைகோர்த்துக் கொண்டு வந்தது ஏன்? என்றும் கேட்டார்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு, மதச்சார்பற்ற இந்தியாவின் இருண்ட பாதத்தை வெளிச்சம் போட்டு காட்டியதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குறிப்பிட்டார். மஸ்ஜிதை இடித்தவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் நிதிஷ்குமாரின் இந்தக் கூற்று ஒரு முதலைக் கண்ணீராகவே கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளை உடனடியாக கைது செய்வதுதான் நாட்டின் மதச்சார்பற்ற தன்மையின் இலக்கணமாக இருக்கும் என்றும் தெரிவித்தப்பட்டது.

பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டி எழுப்பி வயுறுத்தி மஜ்லீúஸ இத்திஹாத்துல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசதுத்தீன் உவைசி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லிபரான் ஆணையத்தில் குறிப்பிடும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து பெங்களூருவில் இமாம் கவுன்சில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, கர்நாடகா சவுஹதா வேதிக், தத் சங்கர்ஷ் சமிதி, சமதா சைனிக்தள், திப்பு ஐக்கிய முன்னணி, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி, பி.யு.சி.எல், கிறிஸ்தவ அமைப்புகள் உள்ளிட்டவை இந்தப் பேரணியில் பங்கேற்றன பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய கவுன்சில் உறுப்பினர் டாக்டர் மெஹ்பூப் அவாத் இமாம் கவுன்சின் உஸ்மான் பேக் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மெழுகுவர்த்தி பேரணி

லிபரான் கமிஷன் குற்றம்சாட்டும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அகில இந்திய மில்லி கவுன்சில் தலைநகர் டெல்லியில் மெழுகுவர்த்தி பேரணி நடத்தியது. மில்லி கவுன்சின் பொதுச்செயலாளர் டாக்டர் மன்சூர் ஆலம் பேரணியில் உரை யாற்றினார். மில்லி கவுன்சின் மெழுகுவர்த்திப் பேரணியிலும் பல்வேறு அமைப்பு களும் பங்கேற்றன.

கறுப்பு பட்டைகள் அணிந்த சமாஜ்வாடி கட்சியினர்

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கறுப்புக் கொடி ஏந்திய சமாஜ்வாடி கட்சியினர் கறுப்பு பட்டைகளை கைகளில் அணிந்து கண்டனக் கோஷங்களை எழுப்பினர். பாபரி மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நரசிம்மராவ் செயல்பட்டார். எனவே அந்த நன்றிக்(!) கடனுக்காக பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போடுவதற்கு பதிலாக ஜெய்ஸ்ரீராவ் என கோஷம் போடலாம் என அரிய ஆலோசனைகளை தனது உரையில் அள்ளித்தெளித்தார்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் வாஜ்பாயி, அத்வானி போன்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாபரி மஸ்ஜித் மறுகட்டுமான அமைப்பு கோரிக்கை விடுத்தது.

தலைநகர் டெல்யில் ஜந்தர்மந்தர் பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அத்வானி உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் வழங்கினர். இந்த மகஜரை பாபரி மஸ்ஜித் மறுகட்டுமானக் கமிட்டியின் தலைவர் முஹம்மத் யூனுஸ் சித்தீக்கின் தலைமையில் வழங்கினர்.

அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகளை அடைத்தும், தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கேரள மாநிலத்தில் பல இடங்களில் முஸ்லிம்கள் கடை அடைப்புகளை நடத்தி தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
-சர்ஜுன்

கருத்துகள் இல்லை: