டெல்அவீவ்: ஃபலஸ்தீன் கைதிகளிடமிருந்து திருடப்பட்ட உடல் உறுப்புகளை இஸ்ரேலிய ராணுவவீரர்கள் உபயோகப்படுத்தியதற்காண தகவலை இஸ்ரேலிய அரசியல் கட்சியின் மூத்த தலைவரான அஹ்மத் தீலி வெளியிட்டுள்ளார்.
1990களில் டெல்அவீவில் சிறையிலிருந்த ஃபலஸ்தீனர்களிடமிருந்து பரவலாக இஸ்ரேலிய ராணுவம் உடல் உறுப்புகளை திருடியதாக மருத்துவ ஆய்வு மையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி தீலி கூறுகிறார்.
இந்த உடல் உறுப்புகள் பெரும்பாலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதயம், எலும்பு, கண், சிறு நீரகம் ஆகியவைத்தான் பெரும்பாலும் திருடப்பட்டுள்ளது.நோயாளிகள் மற்றும் இறந்துபோன ஃபலஸ்தீனர்களின் உடல்களிலிருந்து உறுப்புகள் திருடப்பட்டுள்ளன.
ஃபலஸ்தீனர்களிடமிருந்து திருடப்பட்ட உடல் உறுப்புகள் சர்வதேச சந்தையில் விற்கப்பட்டதாக ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது. உடல் உறுப்பு மாஃபியா கும்பலின் முக்கிய சூத்திரதாரி இஸ்ரேலிய அரசியல் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்தாதன் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டிருந்தது.
இஸ்ரேலிய படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட 16 வயது ஃபலஸ்தீனத்தைச் சார்ந்த பிலால் அஹ்மத் கனீமின் இறந்த உடலில் காணப்பட்ட முறிவு அடையாளங்கள் இஸ்ரேலிய உடல் உறுப்பு திருட்டை வெளிச்சம் போட்டு காட்டியது. கனீமின் உடல் வயிறு கீறப்பட்ட நிலையிலிருந்தது. தொடர்ந்து நடத்திய பிரேத பரிசோதனையில் உடல் உறுப்புகள் திருடப்பட்டது கண்டறியப்பட்டது. விசாரணையில் 20 ஃபலஸ்தீனர்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இவ்விவாதத்தைத் தொடர்ந்து டெல் அவீவில் ஃபாரன்ஸிக் மெடிசின் தலைவர் டாக்டர் யஹூதாஸ் 2004 ஆம் ஆண்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக