வியாழன், 31 டிசம்பர், 2009

ஈரான் அணுகுண்டு, இஸ்ரேல் பரப்பிய கட்டுக்கதை: முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரி

வாஷிங்டன்:அணு ஆயுத தயாரிப்பதற்கு அவசியமான நியூட்ரான் இன்ஷியேட்டர் ஈரான் ரகசியமாக உருவாக்குவதாக லண்டன் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வெளிவந்த செய்தி கட்டுக்கதையென முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரி கூறுகிறார்.

டிசம்பர் 14ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் லண்டன் என்ற பத்திரிகையில் இதுத்தொடர்பாக வெளிவந்த பொய்யான செய்திக்குப்பின்னால் இஸ்ரேலோ அல்லது பிரிட்டனோ இருக்கலாம் என முன்பு சி.ஐ.ஏவின் தீவிரவாத எதிர்ப்பு அதிகாரியாக பணியாற்றிய ஃபிலிப் கிரால்டி கூறுகிறார்.

இவரை மேற்க்கோள் காட்டி இண்டர் பிரஸ் சர்வீஸ் என்ற செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. டைம்ஸ் ஆஃப் லண்டனில் வெளிவந்த செய்தி அடிப்படையற்றது என்று அன்றே ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரமீன் மெஹ்மான் பரஸ் தெளிவுப்படுத்தியிருந்தார்.
2007 முதல் ஈரான் நியூட்ரான் இன்ஷியேட்டர் உருவாக்குவதாக ஏசியன் இண்டலிஜன்ஸ் செண்டர் வெளிப்படுத்தியதாக டைம்ஸ் ஆஃப் லண்டன் பத்திரிகை கூறுகிறது. இந்த செய்தி வெளியானவுடன் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ஈரானுக்கு எதிராக மீண்டும் களமிறங்கின. ராபர்ட் மர்டோக்கின் மீடியாக்கள் இஸ்ரேல் மற்றும் பிரிட்டீஷ் அரசிடமிருந்து வரும் பொய்யான தகவல்களை பரவலாக வெளியிட்டுவருகிறது என்கிறார் கிரால்டி கட்டுக்கதையான செய்திகளின் உண்மை நிலையை வெளிக்கொண்டுவருவதில் முன்பும் முக்கிய பங்குவகித்தவர்தான் சி.ஐ.ஏ வின் முன்னாள் அதிகாரியான ஃபிலிப் கிரால்டி.

சதாம் ஹுசைன் ஈராக் அதிபராகவிருந்தபோது நைஜரிலிருந்து யுரேனியம் வாங்குவதாக குற்றஞ்சாட்டி வந்த கடிதத்தின் பின்னணியில் பெண்டகனின் முன்னாள் ஆலோசகரும், வலதுசாரி சிந்தனையாளருமான மைக்கேல் லீடன் உள்ளார் என்ற உண்மையை கிரால்டி வெளிக்கொணர்ந்தார். ஆனால் ஈராக் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டது அன்றைய புஷ்ஷின் அலுவலகம்.

ஈராக் ஆக்கிரமிப்பிற்கு பிறகே கிரால்டி கூறியது உண்மை என ஒத்துக்கொண்டது அமெரிக்கா.சதாம் ஹுசைனின் உளவுத்துறை நைஜரிலில் தாக்குதலுக்கு திட்டமிடுவதாக வந்த கடிதத்தின் பின்னணியில் அமெரிக்க பாதுகாப்புத்துறையின் அண்டர் செகரட்டரியின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் என்ற உண்மையை வெளிக்கொண்டுவந்ததும் கிரால்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: