புதன், 23 டிசம்பர், 2009

டி.எடப்பாளையம் புது வாழ்வு பெறுமா?


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது டி.எடப்பாளையம் கிராமம். 3500 பேர் வசிக்க கூடிய இக்கிராமத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம்களும், சிறிய எண்ணிக் கையில் தலி­த்களும் வாழ்ந்து வருகின்றன. பஞ்சாயத்து தலைவர் மற்றும் 9 வார்டு உறுப்பினர்களும் டி.எடப்பாளையத்துக்கு பிரதிநிதிகளாக இருக்கின்றனர். இந்த ஊருக்கு சாலைவசதி உட்பட அடிப்படை வசதிகள் எதுவும் சரியாக கிடைப் பதில்லை. பஞ் சாயத்து தலைவரால் ஒரு தெருவிளக்கை கூட மாற்ற முடியாது. ஏன் இந்த நிலை. எல்லாம் அதிகாரிகளின் அலட்சியம் தான்.

டி.எடப்பாளையம் என்ற இந்த கிராமத்தை தனி வருவாய் கிராமமாக பிரிக்காமல் இந்த ஊருக்கு 5 கி.மீ தொலைவில் உள்ள சித்தி­ங்கமடம் என்ற ஊரின் ஒரு தெருவாக சேர்த்துள்ளனர் அலட்சிய அதிகாரிகள். இதனால் இந்த ஊர் மாவட்ட வரைப்படத்தில் கூட கிடையாது. மேலும் இவ்வூர் மக்களுக்கு சேர வேண்டிய நிதிகள் அனைத்தும் சித்தி­ங்கமடத்து மக்களுக்கு போய் சேர்ந் துள்ளது.

இதனால் இவ்வூரில் எந்த நலத்திட்டங்களும் செய்ய முடியாத சூழ்நிலையில் வெறுத்துப் போயுள்ளனர் பஞ்சாயத்து தலைவரும், உறுப்பினர்களும். இச்சூழ்நிலையில் த.மு.மு.கலிவின் கவனத்துக்கு இப்பிரச்சினை கொண்டு வரப்பட்டது. டி.எடப்பாளையம் கிரா மத்தை தனி வருவாய் கிராமமாக அறி விக்க கோரி 1997 முதல் த.மு.மு.க. கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வரு கிறது. எனினும் அதிகாரிகள் மசிவதாக இல்லை. இதனால் கடந்த பாராளுமன்ற தேர்த­ன் போது தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பதறிப்போன அதிகாரிகள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து போராட்டத்தை வாபஸ் பெற செய்தனர்.

ஆனால் வாக்களித்தபடி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த 28.08.2009 அன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த ஆம்புலேன்ஸ் அர்ப்பணிப்பு விழாவில் பேசிய த.மு.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலி­, தனி வருவாய் கிராமமாக அறிவிக்காவிட்டால் ரேஷன் கார்டுகளை திரும்பி அளிக்கும் போராட்டங்கள் நடத்துவோம் என அறிவித்தார்.

இதற்கு பின்பும் நடவடிக்கை இல்லாத காரணத்தால் கடந்த 17.12.2009 அன்று ரேஷன் கார்டுகளை திருப்பி அளிக்கும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. போராட்டங்களுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றன. ஆனால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் 16.12.2009 இரவு 12 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

த.மு.மு.க. மாவட்ட தலைவர் முஸ்தாக், ம.ம.க. மாவட்ட செயலாளர் அப்துல் காதர், த.மு.மு.க. மாவட்ட பொருளாளர் பஜ்ல் முஹம்மது, ஜமாத் தலைவரும் ம.ம.க. கிளை செயலாளருமான ரசூல்கான், த.மு.மு.க. கிளை தலைவர் அப்துல் கரீம், கிளை பொருளாளர் பஷீர், பஞ்சாயத்து தலைவர் அப்துல் கபூர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்காக மாவட்ட ஆட்சி யரிடம் சென்றனர். முத­லில் ஏளனமாக பேசிய கலெக்டர், நிர்வாகிகள் உறுதியைப் பார்த்து விட்டு இன்னும் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதிமொழி அளித்தார்.

இந்நிலையில் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அ­லி கடந்த 17.12.2009 அன்று டி.எடப்பாளையத்துக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார். இன்னும் 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கோப்புகளை தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி உடனடி தீர்வு கிடைக்காவிட்டால் தமிழகம் தழுவிய போராட்டம் வெடிக்கும் என எச்சரித்தார். தற்போது கோப்புகளை அனுப்பும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. டி.எடப்பாளையத்தின் உரிமைக்கான போராட்டம் வெற்றியடையும் என்றே தெரிகிறது.

இந்த நிலையில் இன்று 21.12.09 கலெக்டர் தலைமையில் நடந்த கூட் டத்தில் டி.எடப்பாளையம் பஞ்சாயத்தின் எல்லைகளை நிர்ணயித்து தனி வருவாய் கிராமமாக அறிவிக்க கோரும் திட்டத்தை தலைமை செயலகத்துக்கு வரும் 29.12.09 அன்று இறுதி செய்து அனுப்புவதாக தமுமுக, மமக மற்றும் கிராம நிர்வாகிகளிடம் கலெக்டர் கூறினார்.

கடந்த 4 நாட்களாக இதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் சொன்னபடி தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: