வண்டிப்பெரியார்: பெங்களூரிலிருந்து விடுமுறையின்போது சொந்த ஊருக்கு வந்த இளைஞரை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட காரணத்தால் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கடத்திச்சென்று தங்களது அலுவலகத்தில் அடைத்துவைத்து சித்திரவதைச் செய்துள்ளனர்.
மாவேலிக்கரை என்ற ஊரைச்சார்ந்த கிருஷ்ணன் உண்ணித்தான்-விஜயகுமாரி தம்பதிகளின் மகனும் பெங்களூரிலிலுள்ள கல்லூரியொன்றில் 3-வது ஆண்டு நர்ஸிங் படிப்பை பயிலும் 24 வயதான அனீஷி (தற்போதைய பெயர் முன்னா முஹம்மது) கல்லூரி விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். இவர் மூன்றாண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு அதனை தனது வாழ்க்கை நெறியாகக்கொண்டவர்.
இந்நிலையில் வீட்டிற்கு வந்த முன்னா முஹம்மதை அவருடைய பெற்றோரின் உதவியுடன் ஆர்.எஸ்.எஸ் பாசிஸ இயக்கத்தைச்சார்ந்த 6 குண்டர்கள் நள்ளிரவில் முன்னாவை மயக்க மருந்து கொடுத்து மயங்கச்செய்து கடத்திச்சென்றுள்ளனர். பின்னர் அவரை வண்டிப்பெரியார் என்ற இடத்திலிலுள்ள தங்களது அலுவலகத்தில் கட்டிவைத்து சித்திரவதைச் செய்துள்ளனர். 17 தினங்களுக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை அங்கிருந்து தப்பித்த முன்னா முஹம்மது அரசு பேருந்து ஒன்றில் ஏறி மிளாமலா என்ற இடத்திலிலுள்ள ஜும்ஆ மஸ்ஜிதில் சென்று அபயம் தேடியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஜமாஅத் நிர்வாகிகள் காவல்துறையினரை அழைத்து சம்பவத்தை தெரிவித்துள்ளனர். முன்னாவின் பெற்றோர்கள் கூறுகையில் முன்னாவிற்கு மனநிலை சரியில்லாததால் சிகிட்சைக்காக அனுப்பியதாக தெரிவித்தனர். ஆனால் முன்னா முஹம்மது காவல்துறை மற்றும் பத்திரிகையாளர்களோடு கூறுகையில், "எனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் எனது பெற்றோர்களுடன் என்னை அனுப்பி விடாதீர்கள். எவருடைய நிர்பந்தமுமில்லாமல் தான் சுயமாக இஸ்லாத்தை விரும்பி ஏற்றுக்கொண்டேன்." என்றார் அவர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கை பதிவுச்செய்து விசாரனையை மேற்க்கொண்டு வருகின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக