ஞாயிறு, 27 டிசம்பர், 2009

ஆப்கான் போர் வியட்நாமை நோக்கி திரும்புகிறது: அமெரிக்க ராணுவ வீரர் எச்சரிக்கை

காந்தகார்:ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கைதுச்செய்யப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர் பேட்டியளிக்கும் காட்சிகளடங்கிய வீடியோ டேப் ஒன்று AFP(AGENCY FRANCE-PRESSE) வெளியிட்டது.
அதில் கடந்த ஜூன்மாதம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கைதுச் செய்யப்பட்ட அமெரிக்க ராணுவவீரர் போவ் ராபர்ட் பெர்தாஹ்ல் பேட்டியளிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அவ்வீடியோவில் அவர் கூறுவதாவத "இந்தப்போர் நமது கைகளை விட்டும் நழுவிக்கொண்டிருக்கிறதோ என்று நான் உங்களிடம் பயத்தோடு கூறுகிறேன்.30 ஆயிரம் ராணுவ வீரர்களை கூடுதலாக ஆப்கானிற்கு அனுப்பப்போகும் ஒபாமா அரசுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன்.நீங்கள் எதிர்ப்பது சிறிய குழுவினரை அல்ல. வரலாற்றில் எந்த நாட்டிலும் இதுவரைகாணப்படாத நன்கு கட்டமைக்கப்பட்ட ஆப்கான் கொரில்லா குழுவினரை எதிர்த்துதான் போர் புரியப்போகின்றீர்கள். நான் தாலிபான்களால் நன்றாக மனிதநேயத்துடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட்டு வருகின்றேன். இதற்கு நான் சான்று பகர்கின்றேன். எவரும் எனது ஆடைகளை பறிக்கவில்லை. என்னை நிர்வாணமாக்கி படமும் எடுக்கவில்லை. எனது நாடு(அமெரிக்கா) முஸ்லிம் கைதிகளை நாய்களை விட்டு கடிக்கவைத்தது போல் என்னை அவர்கள்(தாலிபான்கள்)செய்யவில்லை." இவ்வாறு அவர் கூறுகிறார்.
36 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் சேவ் செய்த முகத்துடனும், போர் வீரருக்கான ஆடையுடனும் காணப்படுகிறார் பெர்தாஹ்ல். இவ்வீடியோவில் சிவிலியன்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், தாலிபான்களின் போர் முறைகள் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவால் அநியாயமாக கைதுச்செய்யப்பட்டு அபுகரீப் மற்றும் குவாண்டனாமோ சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் கைதிகளை அமெரிக்க அரசு மிகமோசமான முறையில் நடத்துகிறது. இதற்கான புகைப்படங்கள் வெளிவந்ததும் அவை உலகையே உலுக்கியது. ஆனால் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் தலிபான்களிடம் சிக்கிய பின்னர் அவர் நடத்தப்படும் முறையை அவரே பாராட்டுகிறார்.

இது பற்றி பேட்டியளித்த தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் யூசுஃப் அஹ்மதி கூறுகையில், "அமெரிக்க ராணுவ வீரரை நாங்கள் சித்திரவதைக்கோ அல்லது கடும் வேதனைக்கோ ஆளாக்கவில்லை. இஸ்லாமிய ஷரீஅத்தின் நடைமுறைப்படியே அவர் நடத்தப்பட்டு வருகிறார். அமெரிக்க வசமிருக்கும் எங்களது வீரர்களை விடுவித்தால் நாங்கள் அமெரிக்க ராணுவ வீரரை விடுவிக்க தயாராகயிருக்கிறோம். இந்தப்போரில் எங்களது கரமே ஓங்கியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு தேசம், அவர்கள்(அமெரிக்காவும் அதன் கூட்டணிப்படையினரும்) ஆக்கிரமிப்பாளர்கள் என்பதையும் நாங்கள் இந்தப்போரில் வெற்றிபெறுவோம், ஆக்கிரமிப்பாளர்களான எதிரிகளை இந்தப்போரில் கொல்வோம் அல்லது கைதுச்செய்வோம் என்பதை உலகிற்கு காண்பிக்க விரும்புகிறோம்." இவ்வாறு அஹ்மதி தெரிவித்தார்.
source:islamonline.net

கருத்துகள் இல்லை: