ஞாயிறு, 6 டிசம்பர், 2009

அமெரிக்காவில் மேலும் 6 வங்கிகள் திவால்

வாஷிங்டன்: அமெரிக்காவில் மேலும் 6 வங்கிகள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மட்டும் திவாலான அல்லது நிரந்தரமாக மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 130ஐத் தாண்டியது.

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக பல வங்கிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த வாரம் மூடப்பட்ட 6 வங்கிகளின் விவரம்:

ஜார்ஜியாவில் இயங்கிய டாட்னால் வங்கி, பக்ஹெட் கம்யூனிட்டி வங்கி, பர்ஸ்ட் செக்யூரிட்டி நேஷனல் வங்கி, இல்லினாய்ஸில் இயங்கிய பெஞ்ச்மார்க் வங்கி, வர்ஜீனியாவில் இயங்கிய கிரேட்டர் அட்லாண்டிக் வங்கி மற்றும் ஓஹியோவில் செயல்பட்ட ஆம்ட்ரஸ்ட் வங்கி.

இந்த வங்கிகள் மூடப்பட்டதால் அமெரிக்க காப்பீட்டுத் துறைக்கு 2.3 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் நூற்றுக்கணக்கான வங்கிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக அமெரிக்க நிதித்துறை கருத்து தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: