சனி, 2 ஜனவரி, 2010

மதுரை ஆதீனத்திற்கு மறுப்பு

காஞ்சி சங்கராச்சாரியாரை நபிகள் நாயகம் (ஸல்), ஈஸா (அலை) ஆகியோருடன் ஒப்பிட்டு, நக்கீரன் 26.12.09 இதழில் மதுரை ஆதீனம் பேசியதற்கு, தமுமுக மாநில செயலாளர் பேரா. காஜாகனி நக்கீரனுக்கு அனுப்பியுள்ள கண்டன கடிதம். (-ஆர்.)



இளையராஜாவைத் தொட விரும்பாத ஜெயேந்திரர் (நக்கீரன் டிசலி26, 2009 இதழ் பக்லி1) என்ற தங்கள் கட்டுரையில் காஞ்சி மடத்தலைவர் ஜெயேந்திரரை, மதுரை மடத்தலைவர் ஆதீனம், நபியின் அவ தாரமாகவும், ஏசுவின் அவதாரமாகவும் சித்தரித்துப் போற்றி யுள்ளதைக் குறிப்பிட் டிருந்தீர்கள். மதுரை ஆதினம் சித்த சுவாதீனத்தோடு தான் பேசினாரா? அவரது வார்த்தைகள் இலட் சக்கணக்கான கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமுதாய மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளன.

திருச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் தின் திரிசூலம் வழங்கும் விழாவில் பேசிய அசோக்சிங்கல் திரிசூலத்தின் ஒருமுனை முஸ்லிகளுக்கு, இன்னொரு முனை கிறிஸ்தவர்களுக்கு, மூன்றாவது முனை மதச்சார்பற்ற இந்துக்களுக்கு என்றார் காஞ்சிப் பெரியவாள் அதை ஆமோதிக்க ஆசிர்வதித்தார். மதவெறியை அவர் மறுக் கவில்லை, தன்மனதிலும் அது இருப்பதை மறைக்கவில்லை.

இரக்கம் உடையோர் பேறு பெற் றோர் என்று போதித்த இயேசு பிரானுடன் சங்கரராமன் கொலைப்புகழ் சங்கராச்சாரியை ஆதீனம் ஒப்பிட்டதற்கு பெயர் தான் மடத் தனம் என்பதோ. அச்சம் மடம் பெண்களின் குணங்களாம் இப்போதெல்லாம் பெண்களுக்கு மடம் என்றாலே அச்சம்-என்று என்போன்றோர் எழுதியதற்கு காரணமான ஓர் ஆசாமியை ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும் என்பதை வாழ்க்கையாக்கிய உத்தம நபிகளோடு ஒப்பிடலாமா? குலவெறி கொலை வெறி யாய் வளர்ந்திருந்த காலத்தில் புனித மக்காவில் பீடத்தில் அன்றைய தலித் இனமான கறுப்பினத்தைச் சேர்ந்த பிலால் (ரலி) அவர்களை ஏற்றி அழகு பார்த்தவர் நபிகள் நாயகம்.

காஞ்சி பீடத்தில் ஒடுக்கப்பட்டத் தமிழனால் உட்கார முடியுமா? ஜெயேந்திரரை சிறையிலடைத்த ஜெயலலிதா வைத் தவிர வேறு தலைவர்கள் அவர் எதிரில் கூட உட்கார முடியாதே...

தனக்காகப் பிறர் நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் நரகத்தைத் தன் ஒதுங்கிடமாக ஆக்கிக்கொள்ளட்டும் என்று தன்மானக் கருத்தைப் போதித்தவர் நபிகள் நாயகம்.

அணு விஞ்ஞானியாக இருந்தாலும் இந்த மனு விஞ்ஞானி முன்னால் அமர முடியாதே.... சேரியின் தெருக்கள் அழுக் காக இருப்பதால் இச்சுவாமிகள் அங்கே வராது என்று சொன்னவர் தானே இவர் இளையராஜாவைத் தீண்ட விரும்பாதவர் யாரையெல்லாம் தீண்டியிருக்கிறார் என்பதை நக்கீரன் தானே நாட்டுக்குச் சொன்னது. அவரைப்போய் முஸ்லிம்கள் உயிரினும் மேலாய் மதிக்கும் இறைத் தூதரான இயேசு பிரான் மற்றும் நபிகள் நாயகத்தோடு ஒப்பிடுவது ஓர் ஆதீனத்திற்கு அழகா?

மேலும், அவதாரம் என்றால் கடவுள் மனிதவடிவில் மேலிருந்து கீழே இறங்கு வது என்று பொருள் இஸ்லாம் மார்க் கத் தில் அப்படி ஒரு நம்பிக்கைக்கு இடமே இல்லை. மதுரை ஆதீனம் மற்ற மதத்தினரை வம்புக்கிழுக்காமல், தவத்திரு குன்றக் குடி அடிகளாரைப் போல் நடந்துகொள்ள முயற்சிக்கட்டும்.

கருத்துகள் இல்லை: