சனி, 9 ஜனவரி, 2010

புதிய வரலாறு படைக்கும் அப்துற் ரஹிம் மருத்துவமனை

த மு மு க வின் மாநில செயலாளர் (காலம் சென்ற ) மவ்லவி.அப்துல் ரஹீம் பெயரில் கோவை மாவட்டம் குனியமுத்தூரில் மருத்துவ மனை துவக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த சூழ­ல் இந்த மருத்துவமனையின் சேவை குனியமுத்தூர் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

த மு மு க வின் மாநில செயலாளர் (காலம் சென்ற ) மவ்லவி.அப்துல் ரஹீம் பெயரில் கோவை மாவட்டம் குனியமுத்தூரில் மருத்துவ மனை துவக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த சூழ­ல் இந்த மருத்துவமனையின் சேவை குனியமுத்தூர் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த மருத்துவமனையின் மருத்துவக்குழுவில் பி. வெங்கடாசலம் (அறுவை சிகிச்சை மற்றும் பொது மருத்துவம்) திருமதி.மாலா வெங்கடாசலம் (மகப்பேரு மற்றும் பொது மருத்துவம்) டாக்டர். மானேக் ஆகிய 3 மருத்துவர்கள் மற்றும் 2 செவிலி­யர்கள் உள்ளனர். மருத்துவமனையின் ஒரு பகுதியில் படுக்கை வசதியும், இன்னொரு பகுதியில் ஊசி மற்றும் மருந்துகள் வழங்கும் பிரிவும் இயங்கி வருகின்றது. ஒரு நாளைக்கு சராசரியாக 60 நோயாளிகள் வந்து சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்.

முஸ்­லிம்கள் மட்டுமின்றி பிற சமுதாயத்தினரும் இம்மருத்துவமனைக்கு வந்து குறைந்த செலவில் சிகிச்சை செய்து கொள்ள தடையில்லை என்பதால் பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சிகிச்சையினை மேற்கொள்கிறார்கள். எவ்விதமான பாகுபாடு இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனையானது கோவையில் சிறப்பு மிக்க இடத்தினைப் பிடிக்கும் என்றும் அங்குள்ள பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
.
மருத்துவமனை காலை 10 மணியி­ருந்து பகல் 2 மணியளவிலும் பின்னர் மாலை 5 மணியி­ருந்து இரவு 9 மணி வரையிலும் இயங்கி வருகின்றனது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பார்வை நேரம் அதிகப்படுத்துப் படுகின்றது.

அப்துர் ரஹிம் மருத்துவமனையானது லாப நோக்கத்தில் செயல்படாமல் சேவை நோக்கத்தினை மட்டுமே கருத்தாக கொண்டுச் செயல்பட்டு வருகிறது. குறைந்த கட்டணமே (ரூ. 20 மட்டுமே) இங்கு வசூ­க்கப்படுகிறது. இங்குள்ள மருத்துவர் எழுதித் தரும் மருந்துகளை இங்குள்ள மருந்தகத்தில் கொடுத்து மருந்துகளை கொள்முதல் விலைக்கே பெற்று கொள்ளலாம்.
இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்கு மனிதநேய மிக்கவர்கள் நிதியுதவிகளை செய்வதன் மூலம் எக்ஸ்ரே, ஸ்கேனர், பல்வேறு அறுவைச் சிகிக்சைகள் கொண்ட அதிநவின மருத்துவமனையாக மாற்றிட இயலும்.

தமுமுகவின் எண்ணற்ற மனிதநேய சேவைக்கு புதிய வடிவத்தை இந்த அப்துர் ரஹிம் மருத்துவமனைப் பெற்றுத் தந்துள்ளது. இதனைப் பின்பற்றி இனி தமிழகமெங்கும் புதிய மருத்துவமனைகள் உருவாகுவதற்கு இது சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

-ராமேஸ்வரம் ராஃபி


கருத்துகள் இல்லை: