வியாழன், 21 ஜனவரி, 2010

பரிகாரமாக முஸ்லிமை பிரதமராக்க வேண்டும்

E-mail Print PDF
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு பிராய சித்தமாக ஒருமுஸ்லி­மை இந்திய நாட்டின் பிரதமராக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சியின் முன் னாள் பொதுச்செயலாளர் அமர்சிங் கூறியிருக்கிறார். மகராஷ்ட்ரா மாநிலம் பீவாண்டி சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதில் மகராஷ்ட்ரா மாநில சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் தாக்கரே வகையறாக்களின் வயிற்றெரிச்சலை ஊட்டி வளர்த்து வருபவருமான அபூ ஆஸ்மியின் இளைய சகோதரர் ஃபர்ஹான் போட்டியிடுகிறார்.
சமாஜ்வாடி கட்சியி­ருந்து நீக்கப்பட்ட போதும் ஆஸ்மி தனது நண்பர் என்பதால் அமர்சிங் பீவாண்டியில் பரப்புரை நிகழ்த்தினார், பாப்ரி மஸ்ஜித் இடிப்பு ஒரு வரலாற்றுத் தவறு என்றும் அந்த தவறு நிகழக்காரணமாக இருந்த காங்கிரஸ் தனது அமைச்சர்கள் யாரையும் அப் போது பதவி விலகச் சொல்லவில்லை என்றும் குறற்ம் சாட்டியதோடு மஸ்ஜித் இடிப்பு என்ற கொடும் தவறுக்கு கைமா றாக முஸ்­லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நாட்டின் பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார், 1984லில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கு கைமாறாக மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியதைப் போல பாபர் மஸ்ஜித் தகர்ப்பு தவறுக்காக முஸ்­லிம் ஒருவரை பிரதமர் ஆக்க வேண்டும் என்றும் அமர்சிங் கூறியிருக்கிறார். அமர்சிங் வடஇந்தியாவின் மிகப்பெரிய அரசியல் வியாபார வித்தகர் என பொதுவாக கூறப்படுகிறது.
இவரது அதிரடி முடிவுகள் முலாயமசிங்கின் சமாஜ்வாடிக்கட்சியை பின்னடைவை நோக்கி இழுத்துச் சென்றதாக நடுநிலையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

முஸ்­லிம்கள் பெருவாரியாக வாழும் ராம்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் சினிமா நடிகை ஜெயப்பிரதாவை போட்டியிட வைத்து வெற்றி பெற வைக்க வேண்டும் என சளைக்காமல் போராடிய சமூக(?) நீதிப் போராளியவர். பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு முக்கிய காரண கர்த்தாக்களில் ஒருவரான தேசத்துரோகி கல்யாணசிங்கை சமாஜ்வாடி கட்சியோடு கூட்டணி சேரவைத்து ஜெயித்துக் கொண்டு இருந்த சமாஜ்வாடிக்கட்சியை தோல்வி பள்ளத்தாக்கில் துவைத்த புண்ணியவான். சமாஜ்வாதிக்கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஆஜம்கானை தொடர்ந்து அவமானப்படுத்தினார். தற்போது அரசிய­ல் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முஸ்­ம் பிரதமர் என்ற முழக்கத்தினை முன்னெடுக்கிறார்.

இதற்கு முன்னர் ராகுல்காந்தியும் முஸ்­லிம் பிரதமர் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார்.

இங்கு முஸ்லி­ம்களின் நிறைவேற்றப் படாத கோரிக்கைகள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. குளிர வைக்கும்
வாக்குறுதிகளால் குவிந்திருக்கும் கோரிக்கை மலையின் சிறுபகுதியைக் கூட நகர்த்த முடியவில்லை. முஸ்லிம் பிரதமர், முஸ்­லிம் குடியரசுத்தலைவர், முஸ்­லிம் அமைச்சர், முஸ்லி­ம் கவுன்சிலர், முஸ்லி­ம் டிரைவர், முஸ்லி­ம் கிளீனர் என்ற ஆசை வார்த்தைகளைக் கண்டு முஸ்­லிம்கள் மயங்கிய காலம் மலையேறி விட்டது.
சுதந்திர இந்தியாவில் காலகாலமாக ஒடுக்கப்பட்டிருக்கும் முஸ்லி­ம்களின் அவலநிலையை மாற்றும் எண்ணம் கொண்ட எவரையும் ஏற்றிவிடத் தயங்காத சமூகம்தான் முஸ்­லிம் சமூகம்.
இந்தியத் திருநாட்டின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தேர்ந்தெடுத்த ஜான்கிபூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிகப்பெரும்பான்மையினர் முஸ்­ம்களே(60 சதவீதம்). இதை போன்று எண்ணற்ற அரசியல் பிரபலங்களின் அரசியல் வாழவின் ஏணிகளாக முஸ்லி­ம் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளே அமைந்துள்ளன. எந்த சமூகத்தை சேர்ந்தவரும் எந்த அச்சமும் இன்றி போட்டியிட்டு வெல்ல முடியும். எனவே முஸ்லி­ம்களின் மனதை இடம்பிடிக்க இத்தகைய முழக்கங்கள் தேவையில்லை. அவர்கள் தங்கள் கட்சிகளில், அமைப்புகளில் எத்தனை மாவட்ட, மற்றும் மாநில பொறுப்புகளை வழங்கினார்கள் என இதயத்தை தொட்டுப்பார்த்து பதில் சொல்லட்டும். அதிகாரப்பங்கீட்டுக்கு ஆவனசெய்யுங்கள். ஆசை வார்த்தைகளுக்கு அணைபோடுங்கள். முஸ்லி­ம் பிரதமர் என்ற கோஷம் ஒன்றும் வெல்ல முடியாத இலக்கு அல்ல. ஆனால்
அதை ம­லிவு அரசியலுக்கான களமாக்க வேண்டாம்.
ஹபீபா பாலன்

கருத்துகள் இல்லை: