செவ்வாய், 12 ஜனவரி, 2010

ரூ. 1000 கோடி ரியல் எஸ்டேட் மோசடி அம்பலப்படுத்தியது தமுமுக!

நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் வீட்டுமனை, அதுவும் முதல் போடும் பணம் பலமடங்காக திரும்ப வரும் என்று பல வகையான கவர்ச்சி திட்டங்களை விளம்பரபடுத்தியது ஜே.பீ.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம். இதன் உரிமையாளர் ஜஸ்டின் தேவராஜ்.

மோசடியில் பாதிக்கப்பட்டோர் தமுமுக நிர்வாகிகளுடன் கமிஷனரிடம் புகார் கொடுக்க சென்ற காட்சி.

ஒன்றல்ல, இரண்டல்ல பல கவர்ச்சி திட்டங்களை இந்த நிறுவனம் அறிமுகப் படுத்தியது. ஒரு பிளாட் வாங்கி னால் இன்னொரு பிளாட் இலவசம், 10,000 கட்டினால் வீட்டு மனையோடு ஒருவருடம் கழித்து 1லட்சம் இனாம். என அதிரடி திட்டங்களை அள்ளித் தெளித்து பணங்களை குவித்தது இந்த நிறுவனம்.
சினிமா நடிகர்லிநடிகைகளை வைத்து விளம்பரம் செய்யப்பட்டதால், நம் மக்களை கேட்கவா வேண்டும்? போட்டி போட்டுக் கொண்டு வீட்டு மனைகளை வாங்க பணத்தை கட்டி னர். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் ரூ. 2,36,000 பணம் கட்டி வீட்டுமனைகளை வாங்க முன்பதிவு செய்ததாகவும், இதுவரை மனைகளை பதிவு செய்து கொடுக்கவில்லை. எனவே தமுமுக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறைமுகம் பகுதி தமுமுக அலுவலகத்தில் புகார் செய்தார் பாத்திமா என்ற பெண்மணி.

இதையடுத்து புகாரை பெற்ற பகுதி தலைவர் ஹாலித், செயலாளர் ஜவஹர், மூசா, மமக பொருளாளர் சிக்கந்தர் ஆகியோர், தமுமுக மாவட்ட தலைவர் உஸ்மானுடன் ஆலோசனை செய்த பின் 7-1-2010 அன்று அண்ணாநகரில் உள்ள ஜே.பீ.ஜே. அலுவலகத்துக்கு அப் பெண்மணியை அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அலுவலகத்தில் ஒரு ரவுடிக் கும்பலே நின்றிருந்தது. வாட்டசாட்டமான ரவுடி கள் நமது நிர்வாகிகளைப் பார்த்து, நிலமும் தரமுடியாது, பணமும் தர முடியாது ஒடி விடுங்கள் என மிரட் டல் தொனியில் கூற, துறைமுகம் நிர்வாகிகள் தென்சென்னை மாவட்ட தமுமுக வினருக்கு தகவல் அளித்த னர். இதையடுத்து மாவட்ட தலைவர் சீனி முஹம்மது தலைமையில் தமுமுக வினர் ஜே.பீ.ஜே. ரியல் எஸ்டேட் அலு வலகத்தை நோக்கி திரண்டு வந் தனர். இதைப் பார்த்து விட்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்து, மிரட்டி வெளியே அனுப்பப்பட பொதுமக்கள் தமுமுகவினரிடம் தங்கள் குறையை தெரிவித்து தங்களுக்கு நியாயம் பெற்றுத் தர கோரினார்.

பொதுமக்கள் கூறிய கணக்குப்படி பார்த்தால் 1000 கோடி அளவுக்கு பணம் சுருட்டப்பட்டு இருப்பதை அறிந்த தமுமுக வினர் அதிரடியாக அலுவல கத்திற்குள் நுழைந்தனர்.

மேலும் செய்தி ஊடகங்களுக்கும் ரியல் எஸ்டேட் மோசடியை விளக்கி தகவல் அனுப்பினர். திரண்டு வந்த கூட்டத்தை பார்த்த ரவுடிகளும், அலுவலக ஊழியர்களும் வெலவெலத்து போனார்கள். எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூற, சம்பந்தபட்ட நபர், இன்னும் 1/2 மணி நேரத்தில் வர வேண்டும் என்றும் கெடு விதித்தனர் தமுமுகவினர். அதே நேரத்தில் மீடியாக்களும் ரியல் எஸ்டேட் அலுவலகத்தை நோக்கி படையெடுக்க, பின்வாசல் வழியாக ஒட்டம் பிடித்தனர் ஊழியர்கள்.

பின்னர் தமுமுகவினர் அங்கிருந்த மக்களை ஒன்று திரட்டி கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று புகார் அளித்த னர். தமுமுகவின் அதிரடி முயற்சியின் நடவடிக்கையால், ரூபாய் 1000 கோடி மோசடி, மீடியாக்கள் மூலமாக வெளியே பரவவே தமிழகமே பரபரப்பில் ஆழ்ந்தது. கமிஷனர் உடனடியாக இவ்வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து தனி குழு ஒன்றை அமைத்து இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.


இந்நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் தேவராஜ் ரியல் எஸ்டேட் மோசடி தொடர்பாக கடந்த 4லி1லி2010 அன்று பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி பெல்லா தலைமறைவாகி விட்டார்.

பெங்களூர் சிறையில் உள்ள ஜஸ்டினை கைது செய்து தமிழகம் கொண்டு வர தமிழக போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேவராஜ் மீது இந்திய தண்டனை சட்டம் 420 பிரிவின் (மோசடி) கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு நிறுவ னத்தின் சொத்துக்களை கண்டறியும் வேலைகளிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

மெகா மோசடியை அம்பலப்படுத்திய தமுமுகவினரை பொதுமக்களும், ஊடகங்களும் பாராட்டி வருகின்ற னர். இதே போன்று வேறு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் கவர்ச்சி திட்டங்களை காட்டி மக்களை ஏமாற்றி வருவதாக தெரிகிறது.

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன் காவல்துறையும் உடனே கண்காணித்து ஏமாற்று நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இப்பி பக்கீர்

கருத்துகள் இல்லை: