வியாழன், 7 ஜனவரி, 2010

காஸ்ஸாவிற்கு வந்த நிவாரண உதவிக்குழு எகிப்து துறைமுகத்தில் தடுக்கப்பட்டது

கெய்ரோ:காஸ்ஸாவிற்கு கொண்டு செல்வதற்காக நிவாரண உதவிப் பொருட்களுடன் வந்த விவா ஃபலஸ்தீன் குழுவினரை எகிப்து துறைமுகத்தில் போலீஸ் தடுத்து நிறுத்தியது. தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 55 பேருக்கு காயம் ஏற்பட்டது.

பிரிட்டீஷ் எம்.பி.யான ஜார்ஜ் காலோவே மற்றும் துருக்கி நாட்டு எம்.பிக்களின் தலைமையில் மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுடன் வந்த வாகனங்களைத்தான் எகிப்திய அல் அரீஷ் துறைமுகத்தில் போலீஸ் தடுத்து நிறுத்தியது.

ஒரு வாரத்திற்கு முன்பு ஜோர்டானிலிருந்து வந்த நிவாரண உதவிப் பொருட்களடங்கிய கப்பல் அனுமதி வழங்கப்படாததால் துறைமுகத்தில் நிற்கிறது.

விவா ஃபலஸ்தீன் குழுவின் 59 வாகனங்களை ரஃபா எல்லை வழியாக காஸ்ஸாவிற்கு செல்வதற்கு எகிப்திய போலீஸ் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து போலீஸின் நடவடிக்கையைக் கண்டித்து பேச்சுவார்த்தை நடத்தச்சென்ற 500 க்கு மேற்பட்ட குழுவினர் மீது போலீஸ் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது. தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 55 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இஸ்ரேல்-எகிப்து தடையினால் துயரத்தில் சிக்கித்தவிக்கும் காஸ்ஸா மக்களுக்கு உதவுவதற்காக 210 லோட் உதவிப்பொருட்களுடன் விவா நிவாரணக்குழுவின் கப்பல் வந்தது. கப்பலில் 520 பேர் உள்ளனர். எகிப்து அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் 157 பேரை காஸ்ஸாவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கபட்டதெனினும் அதற்கு விவா பிரதிநிதிகள் சம்மதிக்கவில்லை.தொடர்ந்து 400 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது ஆனால் அனைவரையும் காஸ்ஸாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கவேண்டும் என விவா பிரதிநிதிகள் கோரியுள்ளனர். இதுத்தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.தங்களுக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் தடையை மீறுவோம் என கால்லோவே கூறினார். நிவாரண உதவிக்குழுவினரின் வாகனங்களை இஸ்ரேல் எல்லை வழியாக செல்ல எகிப்து முயற்சி எடுத்துவருகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: