வியாழன், 7 ஜனவரி, 2010

இஸ்லாமிய வங்கியை நிறுவுவதற்கான 'KSIDC'ன் முயற்ச்சிக்கு கேரள உயர் நீதி மன்றம் இடைக்காலத் தடை

கேரளாவிலிலுள்ள அரசு நிறுவனமான கேரள மாநில தொழில் முன்னேற்றக்கழகம்(KSIDC-Kerala Stae Industrial Development Corporation) சார்பாக துவக்கவிருந்த இஸ்லாமிய வங்கியின் தொடர் நடவடிக்கைகளுக்கு கேரள உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் தடைவிதித்துள்ளது.
பாசிச கூடாரத்தில் தஞ்சம் புகுந்துள்ள தமிழகத்தைச் சார்ந்த சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவில்தான் இந்தத்தடையை விதித்துள்ளது உயர் நீதிமன்ற பெஞ்ச்.

இதுத்தொடர்பாக KSIDC க்கும் மத்திய வங்கிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உயர்நீதி மன்றம். சுப்ரமணி சுவாமி தனது மனுவில், "இஸ்லாமிய வங்கி இந்திய நாட்டின் மதசார்பின்மைக் கொள்கைக்கும், வங்கியல் சட்டத்திற்கும் எதிரானது" எனக்குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே இதுத்தொடர்பாக கேரள சட்டமன்றத்தில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் கூறுகையில்,"அரசு ரூ.1000 கோடியை இதன் பங்கு முதலாக நிர்ணயித்துள்ளது" என்றார்.
அரசும் இதுத்தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தபின்னரே இத்திட்டத்திற்கு பச்சக்கொடிக்காட்டியது. இவ்வங்கி முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வட்டியை வழங்காது. இது இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படையில் செயல்படக்கூடியது. வங்கியில் முதலீடு செய்யப்படும் பணத்தை லாபம் தரும் தொழில்களில் முதலீடு செய்யும் அதில் கிடைக்கும் லாபத்தை பங்குதாரர்களுக்கு பிரித்துக்கொடுக்கும்.
கேரளாவில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்திலிருக்கின்றனர் முஸ்லிம்கள். 3.2 கோடி மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 24 சதவீதமாகும். 2007 ஆம் ஆண்டு வரை அரசுப்பெற்ற வரவினத்தில் முஸ்லிம்களின் பங்கு 12,158 கோடி ரூபாயாகும்.
இஸ்லாமிய வங்கிக்குத்தடை தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியானவுடன் அதன் இயக்குநர் IANS செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கையில், "தற்பொழுதுதான் இந்நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இவ்வழக்கு சவாலானது நாங்கள் இதனை சந்திப்போம்" எனத்தெரிவித்தார்.
source:twocircles.net

கருத்துகள் இல்லை: