ஞாயிறு, 10 ஜனவரி, 2010

இந்திய உளவுத்துறை ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களைவிட மோசமானது: முன்னாள் ஐ.ஜி எஸ்.எம்.முஷ்ரிஃப்

நாக்பூர்:மத்திய உளவுத்துறையான ஐ.பி என்றழைக்கப்படும் இண்டலிஜன்ஸ் பீரோ ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களைவிட மோசமானது என மஹாரஷ்ட்ரா காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் ஐ.ஜி எஸ்.எம்.முஷ்ரிஃப் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சங்கர்ஷ் சமிதி ஏற்பாடுச்செய்த கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார் அவர்.எஸ்.எம். முஷ்ரிஃப் கர்காரேயைக்கொன்றது யார்? என்ற நூலின் ஆசிரியர் ஆவார்.
எஸ்.எம். முஷ்ரிஃப் கருத்தரங்கில் ஆற்றிய உரையாவது:"சங்க் பரிவார் சக்திகளுடன் ஐ.பி.நெருங்கியத்தொடர்பை வைத்துள்ளது. சமூகத்தின் எதிரிகளுடன் கைக்கோர்க்கும் இவர்களிடம் தான் நாட்டின் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.இது தான் நமது கைசேதமாகும்.
மலேகான், நந்தத், பர்பானி ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் செயல்பட்ட ஹிந்துத்துவா கரங்களை வெளிஉலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய ஹேமந்த் கர்காரேயையும் அவருடன் பணியாற்றியவர்களையும் தீர்த்துக்கட்ட புதியதொரு திட்டத்தை மும்பை தீவிரவாதத்தாக்குதலின் மூலம் சங்க்பரிவார்களுடன் இணைந்து ஐ.பி.நிகழ்த்திக்காட்டியது.
மும்பைத்தாக்குதலைக்குறித்து 2008 நவம்பர் 18 முதல் ஐ.பிக்கு தகவல் கிடைத்தபொழுதிலும் காவல்துறையினருக்கும், கப்பற்படைக்கும் அத்தகவலை அளிக்காமல் மறைத்து வைத்துள்ளனர். லஷ்கர் தாக்குதல்காரர்களுடன் இணைந்து கர்காரேயையும் அவருடனிருந்தவர்களையும் தீர்த்துக்கட்டுவதற்கான தருணத்தை எதிர்பார்த்தே இவர்கள் மும்பைத்தாக்குதல் பற்றிய தகவல்களை மறைத்துள்ளனர். உள்நாட்டு பாதுகாப்பிற்கு தொடர்பில்லாத கடலோர காவல்படையினருக்கு மட்டும் இவர்கள் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
ஆயுதங்களுடன் மும்பை கடல்பகுதிக்கு படகு மூலமாக தாக்குதல்காரர்கள் வரும் தகவலை அறிந்தும் இவர்கள் மெளனம் சாதித்தனர். ஏற்கனவே RAW என்றழைக்கப்படும் ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் உளவுத்துறையினர் ஐ.பிக்கு அளித்த 35 செல்ஃபோன் நம்பர்களில் சில நம்பர்களை மும்பைத் தாக்குதலின் போது பயன்படுத்தியதாக பின்னர் தெளிவானது.சிம் கார்டுகளைக் குறித்து ’ரா’ விடமிருந்து கிடைத்த தகவலையும் ஐ.பி மூடி மறைத்தனர்.
மும்பைத்தாக்குதல் வேளையில் சி.எஸ்.டி ஸ்டேசனிலிருந்து கிடைத்த சிம் கார்டின் உரிமையாளர் மஹாராஷ்ட்ரா மாநிலம் சத்தாரா பகுதியைச்சார்ந்தவர் என்பது தெளிவான பின்னரும் உயர்மட்ட தலையீடு காரணமாக இதுத்தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறவில்லை. சி.எஸ்.டி யில் 35 க்ளோஸ்ட் சர்க்யூட் காமராக்கள் உள்ளன.ஆனால் தாக்குதல் வேளையில் அப்பகுதியில் நிறுவப்பட்டிருந்த 16 காமராக்கள் செயல்படவில்லை என மூத்த போலீஸ் அதிகாரி வெளிப்படுத்தியிருந்தார்.

இச்சம்பவத்தை எதேச்சையானது என்று எடுத்துக் கொள்ளவியலாது. நாட்டில் நடைபெற்ற நாசவேலைகளில் ஹிந்துத்துவா அமைப்புகள் மற்றும் அதன் தலைவர்களின் பங்கை வெளிப்படுத்தும் வேளையில்தான் கர்காரேயும் அவருடனிருந்த சாலஸ்கர் மற்றும் ஆம்தே ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
நான் எழுதிய புத்தகத்தை குறித்து பேசுவதற்கு அழைப்பு விடுத்ததையடுத்து கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி புனேயிலுள்ள தனது வீட்டில் 25 க்குமேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டபோதும் சிறிய பத்திரிகைகள் மட்டுமே அதனைக் குறித்த செய்திகளை வெளியிட்டன. இது பத்திரிகைத்துறையில் சங்க்பரிவாரத்தின் ஆதிக்கத்தை காட்டுகிறது". இவ்வாறு அவர் உரையாற்றினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: